(Reading time: 30 - 60 minutes)

அதிலெல்லாம் தங்கள் கவனத்தை சிதறவிடாம வெற்றிக்கரமாக கடந்து வருவதே ஒரு சாதனை தான், அதை அப்போ நான் உணராம இருந்துட்டேன். இதில் யாரையும் நான் காரணமாக சொல்ல முடியாது புரிஞ்சுதா?"

"உண்மை தான் யாதவி.. இந்த பக்குவம் ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி, அந்த பதின் வயதிலேயே வந்துடுசுன்னா கண்டிப்பா எந்த ஒரு விஷயமும் அவங்களை சலனப்படுத்தாது.."

"ம்ம் ஆமாம்.. அப்போ நான் கிளம்பட்டுமா சாத்விக்.."

"போயிட்டு வா யாதவி.. இனியாவது நீ நல்லப்படியா வாழணும்.. அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.."

"சரி நான் வரேன்.." என்று அவனிடம் விடைப்பெற்றவள், பெரியவர்களையும் பார்த்து தலையசைத்து விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

அவள் சென்றதும் சாத்விக் அருகில் வந்த வசந்தன், "இந்த தெளிவு உங்க ரெண்டுப்பேருக்கும் அப்போதே இருந்திருந்தா எந்த பிரச்சனையும் இல்ல.. சரி இனி அந்த பொண்ணு உன்னோட வாழ்க்கையில் இல்லை.. அதனால் உனக்காக நான் பார்க்கும் பொண்ணை ஒழுங்கா கல்யாணம் செய்துக்க.." என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

காலையிலேயே யாதவியை கூட்டி வர வேண்டும் என்று நினைத்ததால் விபாகரன் இன்று அலுவலகம் செல்லவில்லை, அஜயிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு தான் அவன் பாலா வீட்டிற்குச் சென்றான். அடுத்து யாதவி சாத்விக்கை பார்த்து பேச வேண்டுமென்று கூறியதால், அவன் நேராக வீட்டுக்கு வந்துவிட்டான்.

யாதவியோடு வருவான் என்று எதிர்பார்த்திருந்த மஞ்சுளா, அவன் தனியாக வரவும், "என்ன விபு.. யாதவியை கூட்டிட்டு வரத் தானே போன.. அவ வரலையா?" என்றுக் கேட்டார்.

"கொஞ்ச நேரத்தில் வந்துடுவா ம்மா.." என்று அவன் பதில் கூற,

"சரி நான் நேத்து சொன்ன விஷயத்தை ஞாபகத்தில் வச்சிருக்கல்ல.. நீ சரின்னு சொன்னா, சீக்கிரம் ஒரு நல்ல நாள் பார்ப்பேன், உங்களுக்கு மறுபடியும் கல்யாணத்தை முடிச்சிடலாம்.." என்றார்.

"யாதவி வந்துடட்டும் ம்மா.. அப்புறம் உங்கக்கிட்ட இதைப்பத்தி பேசறேன்.." என்றவன், மேலே தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

இத்தனையும் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அர்ச்சனாவும் உடனிருந்தாள் தான், ஆனால் அதில் அவள் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். நேற்று விபாகரனிடம் பேசிவிட்டு வந்தபிறகு மஞ்சுளா அர்ச்சனாவிற்கும் பேசி புரிய வைத்திருந்தார். விபாகரன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.