(Reading time: 30 - 60 minutes)

"அப்படியா யாரது?" என்றுக் கேட்டான்.

"மதுரிமா.. அவ உங்களை பார்த்ததிலிருந்து நேசிக்க ஆரம்பிச்சிட்டா.. உங்களை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டா.. அவளை ஒரு நடிகைன்னு பார்க்காம நீங்க சாதாரண பெண்ணா நடத்தின உங்க மனசு அவளுக்கு பிடிச்சுது.. உங்களை முதல் முறை பார்த்துட்டு வந்துட்டு என்கிட்ட உங்களைப்பத்தியே பேசிட்டு இருந்தா தெரியுமா? உங்களுக்கு அவ தான் ஏத்தவ.."

"என்னை நேசிக்கிறாங்கிற ஒரே காரணத்துக்காக அவளை நான் கல்யாணம் செய்துக்க முடியுமா? அப்போ என்னோட ஆஃபிஸ்ல கூட தான் ஒரு பொண்ணு விடாம என்னையே பார்க்குது, நான் நம்ம எம்.டி ய காதலிக்கிறேன்னு மத்தவங்கக்கிட்டல்லாம் சொல்லிக்கிட்டு சுத்துது.. அது என்னோட காதுக்கு வந்தது தெரிஞ்சிருந்தும் தினம் என்னை சைட் அடிக்கிறத விடல.. அப்போ அந்த பெண்ணை நான் கல்யாணம் செய்துக்கட்டுமா?" என்று அவன் கேட்க,

"என்னது.." என்று அதிர்ச்சியோடு விழி விரித்து கேட்டவளின் கண்களில் பொறாமை தெரிய, அருகிலிருந்து அதை பார்த்தவனுக்கு அவள் மீது இன்னும் இன்னும் காதல் கூடித்தான் போனது.

அவள் கைகளை விடுவித்தவன், அவளது கன்னத்தை தன் இரு கைகளாலும் தாங்கி, "மதுரிமாவை முதன்முதலில் பார்க்கும்போது உண்மையிலேயே அவள் நடிகைன்னு தெரியாமல் தான் பேசினேன். அதேபோல அவ முகம் கூட அப்போது என் மனதில் பதியவே இல்லை. அவளை எண்ணி நாலஞ்சு முறை தான் பார்த்திருப்பேன், ஆனா கடைசியா அஜய், சுஜனா நிச்சயதார்த்தம் அன்றைக்கு தான் அவ முகமே என்னோட ஞாபகத்தில் வந்துச்சு,

அவ என்னை நேசிக்கலாம், ஆனா எனக்கு அவ மேல எந்த ஈடுபாடும் கிடையாது.. ஏன்னா ஏற்கனவே என்னோட மனசுல ஒரு பொண்ணு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திட்டா.. இவளை தான் நீ கல்யாணம் செய்துக்கணும் விபுன்னு எங்கம்மா சொன்ன அந்த நொடியிலேயே அவ என்னோட மனசுல வந்துட்டா.. அவ என்னோட மனசுல இருக்கும் போது வேற எந்த பொண்ணும் என்னோட மனசுல இடம் பிடிக்க முடியாது.. அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியணுமா?" என்றுக் கேட்க,

அது அவள் தான் என தெரிந்தும் யாதவி ஆமாம் என்பது போல் தலையாட்டினாள். அவள் கண்களோ மகிழ்ச்சியில் கண்ணீரால் கலங்கியிருந்தது.

"அவ பேர் யாதவி.. அவளை என்னோட மனசுல ஆறு வருஷமா சுமந்துக்கிட்டு இருக்கேன்.. அவ என்னை காதலிக்கலன்னா என்ன? நான் அவளை தானே காதலிக்கிறேன்.. அந்த காலத்தில் கல்யாணத்துக்கு முன்ன காதலிச்சிக்கிட்டா இருந்தாங்க.. கல்யாணம் அன்றைக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.