(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மது

Senthamizh thenmozhiyaal

ரையைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில் ஆவலாக துள்ளி ஓடி வரும் அலைகளின் உற்சாக ஆரவார ஓசை தேன்மொழிக்கு மிகப் பிடிக்கும்.

“அண்ணா அலைகளின் ஓசையில் டியூன் போடு” இளமாறனை கீ போர்ட்டில் இசைக்க சொல்லி அடிக்கடி கேட்பாள்.

இளமாறன் அலைகளின் ராகத்தை தனது கீ போர்ட்டில் கொண்டு வர கூட சேர்ந்து இனிமையாக ராகம் இசைப்பாள் தேன்மொழி.

“பாப்பா உன் குரல் ரொம்ப இனிமையா இருக்கு. சுருதி தப்பாம அழகா பாடுகிறாய்” இளமாறன் சொல்லி முடிக்கும் முன் கும்பிடு போடுவாள் இளையவள்.

“நீ அடுத்து என்ன கேட்க போறன்னு தெரியும். நான் வரல இந்த ஆட்டத்துக்கு” தேன்மொழி தப்பி ஒடிவிடுவாள்.

அலைகளின் ஓசை செவிகளை தீண்ட மூளை நினைவு பெட்டகத்தில் இருந்து பழைய நிகழ்வுகளை அவள் மனத்திரையில் ஓட்டிக் கொண்டிருக்க இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்தன.

மெல்ல மெல்ல ஸ்மரணை வர இப்போது தனது மேனியை அலைகள் மெல்ல மெல்ல தீண்டிக் கொண்டிருக்கும் ஸ்பரிச உணர்வும் திரும்பி விட லேசாக அசைந்தாள்.

இமைகள் விரியும் முன் அவளின் தொடு உணர்வு அவள் எதன் மீதோ அல்லது யார் மீதோ பற்றி படர்ந்து கொண்டிருப்பதை உணர்த்த அவளை அறியாமல் ஓர் சிலிர்ப்பு அவள் தேகத்தில்.

உணர்வுகள் முழுவதுமாக விழித்துக் கொள்ள அவளுக்கு எல்லாமே நினைவு வந்தது.

அந்தி மாலைப் பொழுதில் தனது கேமராவை எடுத்துக் கொண்டு சீக்கிரம் திரும்பி விடுவதாக ஆதியிடம் சொல்லிவிட்டு டைவ் செய்தாள்.

அதிசயமாக சிறு மீன் கூட காணக்கிடைக்கவில்லை.

சற்று தூரம் கடலுக்குள் நீந்திக் கொண்டிருந்தவளின் அறிவு வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தியது.

எப்படி நிலத்தில் பூகம்பம் ஏற்படுகிறதோ கடலுக்கு அடியிலும் பூகம்பம் ஏற்படும். அப்படி ஏற்படும் போது அதன் அளவு மிக அதிகமாக இருப்பின் கடல் நீர் சுனாமியாக பொங்கி எழும்.

அப்படி பட்ட சூழ்நிலைகளை பிராணிகள் எப்போதும் அறிந்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு பெயர்ந்து சென்று விடும். அது கடல் வாழ் பிராணிகளுக்கும் பொருந்தும்.

அப்படி ஏதேனும் நிகழப் போவதை அறிந்த தேன்மொழி உடனடியாக படகிற்கு திரும்ப அவள் கண்களில் பட்டது அந்த ஆக்டபஸ்.

ஆக்டபஸை கண்டவள் கேமராவை செட் செய்து போகஸ் செய்து படங்களை எடுத்த போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.