(Reading time: 11 - 22 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

திறமைசாலிதான் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டாள் நிலா.

ரகுவுடன் நிலா குடும்பம் கிளம்ப, சற்று நேரத்தில் ரகு குடும்பமும் cab வந்ததும் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.

carல் பின் இருக்கையில் சிவகாமி அழுது கொண்டு வர, அவரை சமாதானம் செய்தவாரு நிலா வந்தாள். Car ஓட்டும் போது அவ்வப்போது ரகு தன் கார் கண்ணாடியில் பின்னால் பார்த்துக் கொண்டு வந்தான். அதை நிலாவும் ஓர் இருமுறை கவனித்தாள்.

“aunty கவளபடாதீங்க. பாட்டிக்கு ஒன்னும் ஆகாது. நீங்க hospital ku போறதுக்குல்ல அவங்க குணமாயிடுவாங்கஎன்று ஆருதலுடனும் உரிமையுடனும் கூறினான் ரகு.

அது அந்த carல் இருந்த மூவருக்குமே ஆருதலாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாலை நெரிசல் அவ்வளவாக இல்லை. ரகு வேகமாகவே மருத்துவமனைக்கு முன் வந்து carஐ நிறுத்தினான்.

அவனுக்கு நன்றி கூறிவிட்டு, அவனையும் உள்ளே அழைத்தார் சங்கர்.

“uncle நீங்க போய் பாட்டிய பாருங்க, நான் அப்பா அம்மாவோட மாலை வந்து பார்க்கிறேன்என்று கூறி அவர்களை மட்டும் அனுப்பினான். அதுதான் சரி என்று சங்கருக்கும் பட அவரும் அவனை வற்புறுத்தவில்லை.

நிலா hospitalஐ நோக்கி நடக்கும் போது, “இன்று இவனிடம் பேசிவிடலாம் என்று நினைத்தது எல்லாம் இப்படி வீனா போச்சேஎன்று நினைத்துக் கொண்டு, திரும்பி ரகுவை ஏக்கத்தோடு ஒரு பார்வை பார்த்தாள். அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து, அவர்களை பத்திரமாக மருத்துவமனையில் drop செய்ததை மட்டும் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றான் ரகு.

மாலை நாகராஜனுக்குக் கால் செய்த சங்கர், சிவகாமியின் தாயின் உடல் நிலை நல்ல முறையில் உள்ளதாகவும், காலையில் செய்த உதவிக்கு நன்றியும் கூறினார்.

இரண்டு நாள் கழித்து செவ்வாய் மாலை சங்கரும் சிவகாமியும், ரகுவின் வீட்டிற்கு வந்தனர். எந்த அறிவிப்பும் இல்லாமல் வந்தது நாகராஜனுக்கும், பானுமதிக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களை வரவேற்றுச் சாப்பிடக் காபி பலகாரம் எல்லாம் கொடுத்தனர்.

அண்ணைக்கு நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி சம்பந்திஎன்றார் சங்கர்.

என்னங்க இது, சம்பந்தினு சொல்லிட்டு வெளி ஆளுக்கு நன்றி சொல்ற மாதிரி சொல்றீங்க.” என்று சங்கரை பார்த்துச் சொல்லிவிட்டு, சிவகாமியிடம்அம்மா எப்படி இருக்காங்கஎன்றார் நாகராஜன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.