(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

ரானாவிற்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம். ஆனால் அக்பரோடான வாழ்க்கை என்றான பிறகு அப்படிச் செய்தால் அதுவும் தவறே. மேலும் அவளிடம் உள்ள வீரர்கள் அனைவரும் அவள் தந்தைக்குக் கட்டுப் பட்டவர்களே. அத்தோடு வீரம் இருக்கும் அளவிற்கு விவேகம் இல்லாதவர்கள். எதுவும் செய்ய

அக்பரோடான இத்தனைப் பேச்சுக்களும் அவர்களின் தனி அறையில் தான் என்றாலும், உணவு உண்ணும் நேரத்தில் நடந்ததால், அங்கே ராணி கிரண் தேவியே அவர்களுக்கு பணி செய்து கொண்டு இருந்தாள்.

இருவரின் பேச்சுக்களையும் கேட்ட ராணி கிரண் தேவிக்கு செய்திகளை உடனடியாக இளவரசன் ப்ரித்வியிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆனால் அது சாத்தியம் இல்லை.

மற்ற ராணிகளை விட ஜோதாவிற்கு சற்று அதிக சலுகைகள் கொடுக்கப் பட்டு இருந்தாலும் , மற்றவற்றில் முஹலாயப் பெண்களின் கட்டுப்பாடுகளே அவளுக்கும் இருந்தது. அதுவே அவளின் பணியாளர்களுக்கும் விதிக்கப் பட்டு இருந்தது.

எனவே பணியாளர்கள் ஆனாலும், நேரடியாகச் சென்றுப் பேச முடியாது. ஏன் யாரையும் கண்ணால் காணக் கூட இயலாது. எதுவும் தேவை எனில் ஒரு மணி அடிக்கப் படும். பணியாளர் வந்து திரைக்குப் பின்னால் நிற்க, அதன் மறுபக்கம் இருப்பவர்கள் உத்தரவோ, அவர்களின் தேவையோ தெரிவிக்க வேண்டும். இதுவே நடைமுறை.

இந்த நிலையில் இளவரசன் ப்ரித்வியை எப்படித் தொடர்பு கொள்வது என்ற சிந்தனையில் இருந்தாள் கிரண் தேவி.

அக்பர் கிரண் தேவியையேப் பார்த்துக் கொண்டு இருந்ததோ, அவளின் கண்களும், புருவங்களும் சுருங்கி விரிவதில் இருந்து அவளின் சிந்தனை செல்லும் விதமும் புரிந்து கொண்ட அக்பரின் முகத்தில் புன்னகை வந்ததையோ இரு ராணிகளும் அறியவில்லை.

உணவு முடித்து கிரண் தேவியை செல்லுமாறு கையசைக்கவும், இரு ராணிகளும் சுதாரித்துக் கொண்டனர். ஜோதா கிரண் தேவியிடம் தலையசைவால் வெளியே செல்லச் சொல்ல, கிரண் தேவி கிளம்பினாள்.

அவள் கதவருகில் செல்லும்போது,

“ஜோதா, நாளை மறுநாள் முதல் நோவ்ரோஜ் விழா நடைபெறுகிறது. “ என்று கூறினார் அக்பர்.

அதைக் கேட்டபடி கிரண் தேவி மெதுவாக நடக்க, ஜோதாவோ

“அங்கே என்ன சிறப்பு சக்கரவர்த்தி? மேலும் பெண்களுக்கும் அனுமதி உண்டா?” என்றுக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.