(Reading time: 11 - 22 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

முடியாமபோச்சு..இப்போ இதோ எங்கம்மா இவங்களைப் பார்க்கத் தான் வந்துருக்கேன்..நீங்க பேசிட்டு இருங்க நான் போய் குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்..”,என்றவர் உள்ளே செல்ல ஷியாமா அந்த முதியவரிடம் பேச ஆரம்பித்தாள்.

பாட்டி உங்களுக்குத் தெரிஞ்சத சொல்றீங்களா?”

சந்தியா மகனோட சிநேகிதியா நீ..இப்போ அவ எப்படி இருக்கா..பெரிய சமீன் குடும்பம்னு சொன்னாங்களே?”

ம்ம் ஆமா அவங்க நல்லாயிருக்காங்க..”

ம்ம் என்னனு சொல்றது அழகான குடும்பம் அவங்களோடது..காசு பணம் இல்லைனாலும் சந்தோசத்துக்கு குறைவில்லாம இருந்தாங்க..அதுவும் அந்த புள்ளை சந்தியா..அதிர்ந்து கூட பேச தெரியாது.அவளுக்கு முதல்ல இருந்தே அந்த கல்யாணத்துல விருப்பமில்ல..அப்பனும் ஆத்தாவுமா சேர்ந்து கண்டதை பேசி சம்மதிக்க வச்சாக போல..

பாவி மக போகும்போது திரும்பிக் கூட அவுகள பார்க்கல..வைராக்யம் பிடிச்சவ..என்ன பண்றது ஆண்டவன் கணக்கை நாம மாத்திடவா முடியும்..”,

எனும்போதே அவரது மகள் அவளுக்கான காபியோடு அங்கு வந்தார்.அதை எடுத்துக் கொண்டவள் சிநேகமாய் சிரித்தவாறே பருக ஆரம்பித்திருந்தாள்.அதற்குள் அந்த பெண்மணியின் கைப்பேசி அலற அதை எடுத்து பேசியவர் ஏதேதோ மருந்து பெயர்களைக் கூறி தான் இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் கூறினார்.

ஒருபத்து நிமிஷம் நம்மளை காணலனா போன் மேல போன் வந்துரும்..எல்லாம் கத்துகுட்டிங்களா இருக்கா..என்னைக் கேட்டுதான் காய்ச்சல் தலைவலிக்கு கூட மாத்திரை கொடுக்குதுங்க..என்ன பண்றது..”,என்றதை சாதாரணமாய் கேட்டுக் கொண்டிருந்தவளுக்குச் சட்டென எதோ ஒரு பொறித் தட்ட,

உங்க பேரு?என்னவா இருக்கீங்க?”

அமுதாஸ்டாப் நர்ஸா  இருக்கேன்..”

வாட்???'”

ஏன்ம்மா என்னாச்சு??”

இல்ல..அது..”,என்றவளுக்கு கிடைத்த அடுத்தடுத்த தகவல்கள் பெரும் வியப்பைக் கொடுத்தன.இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் விடைபெற்று தனது ரெசார்ட்டை அடைந்தாள்.

வந்த வேலை முடிந்ததால் மறுநாள் காலை கோயம்புத்தூர் வந்து விடுதாக மகிழனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு படுத்தவளுக்கு அன்றைய களைப்பில் உடனே தூக்கம் கண்களைத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.