(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“எனக்கு அது பழக்கமான விசயம்தான். சில சமயம் ‘லேப்’ல ஆரம்பிச்ச டெஸ்ட் முடிந்திருக்காது. 24 மணி  நேர ரன்னிங் செக் இருக்கும். கண் விழித்து ரீடிங் பார்த்துட்டே இருப்போம்.”

“நீங்க என்ன மாதிரி ஆராய்ச்சிகள் செய்றீங்க சார்?”

முதல்முறையாக அதிதி அவனுடைய வேலை பற்றி விசாரிக்கிறாள். அவனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறாள். அப்பாவின் திட்டம் இதுதானோ? அவனை புரிந்து கொண்டால் விவாகரத்து முடிவில் இருந்து விலகி விடுவாள் என்று நினைத்திருப்பாரோ?

வாட் எவர் இட் ஈஸ்…  அதிதி…! நான் ஒரு ஆராய்ச்சியாளன். கண்ணுக்கு முன் தெரியும் விசயங்களை மட்டும் கவனத்தில் கொண்டு முடிவிற்கு வர மாட்டேன். காரண காரியங்களை ஆராய்ந்து பார்ப்பேன்.  எந்த சிக்கலான சூழலிலும் உன்னை கைவிட மாட்டேன். ஏனெனில் சிந்திப்பதிலும் செயல்படுவதிலும் ஒரு   நேர்மை… ஒரு தூய்மை உன்னிடம் இருக்கிறது. ஐ ட்ரஸ்ட் யூ!

அதிரதன் இருளில் வெறித்து பார்த்துக் கொண்டே அதிதியிடம் மானசீகமாக சத்தியம் செய்து கொண்டிருந்தான்.

"சார்… உங்க வேலை மரபணு தெடர்புடையது… ம்… மரபணுக்களை மாற்றம் செய்வதா?" அதிதி பேசுவதை கவனித்தான்.

"ஜீனோம் ஆராய்ச்சி என்றாலே ஜீன் மாற்றம் செய்வது அல்ல.  அதெல்லாம் ரொம்ப பழைய ஆராய்ச்சி. இப்போது ஜீன் எடிட்டிங் என்பதுதான் நடக்கிறது."

"@#$&%"  என்று அதிதி புரியாத பார்வை பார்த்தாள்.

"வெல்.. இந்த ஆராய்ச்சிகள் பற்றி உனக்கு ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன்." அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது…

முதுகில் குறுகுறுக்கும் உணர்வு ஏற்பட்டது. அவனுக்கு சில்லிட்டது… இங்கே வேறு யாரோவும் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு வேளை… ஒரு வேளை.. 'அது'தானோ..

தொடரும்

Episode # 06

Episode # 08

Go to Marulathe maiyathi nenche story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.