(Reading time: 9 - 18 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

"ஓ அதில் உனக்கு எந்த சப்ஜெக்ட் இன்ட்ரஸ்ட்டா படிப்ப?"

"எங்க மாமா,  தமிழ் மீடியத்தில் படிச்சிட்டு, திடீர்னு இங்கிலீஷ்ல படிக்கவும் எல்லாமே கொஞ்சம் தடுமாற்றம் தான், பெருசா மார்க் எடுக்கல, காமர்ஸ் கொஞ்சம் நல்லா வரும், அதனால அதுல கொஞ்சம் நிறைய மார்க் எடுத்தேன்." என்று அவள் உள்ளதை உள்ளப்படி சொல்ல,

"இங்கிலீஷ் ஒன்னும் அவ்வளவு கஷ்டமில்ல, ஈஸியா கத்துக்கலாம், நம்ம கஷ்டம்னு நினைச்சா தான் அது கஷ்டமா தெரியும், நான் எதுக்கு இருக்கேன், உனக்கு புரியலன்னா நான் சொல்லித் தரேன், அப்போ உனக்கு காமர்ஸ் தான் ஈஸியா வரும்னா அப்போ பிகாம்க்கு அப்ளை செஞ்சுடுவோம், நாலைஞ்சு காலேஜ்ல இருந்து அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்திருக்கேன். அந்த காலேஜ்ல எல்லாம் அப்ளை செய்வோம், எது ஓகேன்னு பார்த்து சேர்ந்துக்கலாம்," என்று சொல்ல,

"மாமா.." என்று நித்யா சொல்ல தயங்கி இழுத்தவள்,

பின், "நான் வீட்ல இருந்தே படிக்கட்டுமா மாமா?" என்று மனதில் நினைத்ததை கேட்டுவிட்டாள்.

"நேத்து தானே இதைப்பத்தி பேசினோம், நீ வீட்டுக்குள்ளேயே இருந்து உனக்கு நிறைய உலக அனுபவம் இல்ல, அதனால நீ காலேஜ் போய் படிக்கிறது தான் நல்லது. ஒரு டிகிரியாவது காலேஜ்ல முடிச்சிட்டு, அடுத்து பிஜி வேணும்னா வீட்ல இருந்து கூட படிச்சிக்கலாம், அதனால நீ காலேஜூக்கு தான் போகணும்." என்று அவன் தீர்மானமாக சொல்ல,

"அதில்ல மாமா, எனக்கென்னமோ வீட்ல இருந்து தான் படிக்கிறது நல்லதுன்னு தோனுது," என்று மீண்டும் தயக்கத்தோடு கூறினாள்.

"ம்ம் என்ன நல்லது?" அவன் கேட்க, எப்படி சொல்வது என்று தெரியாமல் அவள் மௌனத்தையே பதிலாக அளிக்க,

"இங்கப்பாரு நித்தி, முதலில் மனசுல என்ன நினைக்கிறியோ அதை பேசு, அதைவிட்டு இப்படி தயங்கிக்கிட்டு இருக்காத, என்னை பார்த்து ஏன் பயப்பட்ற? நான் என்ன புலியா? சிங்கமா?" என்று கேட்டான்.

"பயமெல்லாம் ஒன்னுமில்ல மாமா," என்ற அவளது பதிலில்,

"அப்போ எதுக்கு தயங்கற?" என்று அவன் கேட்கவும்,

"இப்போ நீங்களே தான் நான் படிக்கணும்னு சொல்லி என்னை காலேஜூல் சேர்க்க போறீங்க, ஆனா இதே மனநிலை நான் படிச்சு முடிக்கற வரை இருக்குமா? நான் படிப்பில் என்னோட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.