(Reading time: 15 - 29 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

அவன் செல்லவும் அப்துலிடம் திரும்பியவர்

“இத்தனை நேரம் அந்தப் பெண் உதய்ப்பூர் சென்று இருப்பாள்?” என்றார்.

“எப்படிச் சொல்கிறீர்கள் அரசே?”

“அந்தப் பெண் அரண்மனையில் எங்கோ ஒளிந்துக் கொண்டு, ஜோதா ராணி பணிப்பெண்களுடன் வருவதைப் பார்த்து அவர்களோடு சேர்ந்துக் கொண்டாள். இத்தனை நேரம் அவள் உணர்ந்து இருப்பாள். தான் எப்படியும் தேடப் படுவோம் என்று. அதனால் அவள் புறப்பட்டு இருப்பாள்”

“தற்போது என்ன செய்ய வேண்டும் அரசே?”

“அந்தப் பெண்ணைத் தேடச் சொல்லி நாடு முழுதும் உத்தரவு போடுங்கள். குறிப்பாக எல்லைகளிலும், உதய் பூர் எல்லைகளிலும் தேடச் சொல்.” என, சரி என்றார் அப்துல்.

‘அப்படியே ஜோதாவின் அரண்மனை முழுதும் சோதனை இடுங்கள். மேலும் அங்கிருந்து யாரவது காணமல் போயிருந்தாலும் அவர்களைப் பற்றிய விவரங்கள் கேட்டு வாங்குங்கள்” என்றார் அக்பர்.

சற்று நேரத்தில் மொத்த விபரத்துடன் வந்த அக்பரின் படைத் தலைவன்,

“அரசே, அந்தப் பெண் மகாரானாவின் செல்லப் புதல்வி. மேலும் அங்கிருந்த ராஜபுத்திரக் காவலன் தலைவனும் காணவில்லை.” என்றுக் கூறவும் அக்பர் புரிந்துக் கொண்டார்.

இது தனக்காகப் பின்னப்பட்ட வலை என்றுப் புரிந்து கொண்டார்.

தன் படைத்தளபதியிடம் “அந்தப் பெண் எனக்கு உயிருடன வேண்டும்.” என்றுக் கூறியவர்,

“நம் படைகள் ராணாவை நோக்கிப் படையெடுக்கத் தயாராக இருக்கச் சொல்லுங்கள். “ என்று கூறவும்,

“உத்தரவு இளவரசே” என்றுக் கூறி விட்டுச் சென்றுவிட்டான்.

அக்பரிடமிருந்து தப்பித்து இளவரசன் ப்ரித்விராஜ், கிரண் தேவி இருவரும் ராணாவிடம் வந்து சேர்ந்து இருந்தனர். ஆரண்ய மலையடிவாரத்தில் வீரர்களின் கூடாரம் போடப் பட்டு இருக்க, படை வீரர்கள் யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

மகாரானாவிடம் ப்ரித்விராஜ்

“மகராஜ், யுத்தத்திற்கு ஆயத்தமாக இருப்பது போல் இருக்கிறதே?” என்று கேட்டான்.

“ஆம் பிகானர் இளவரசே. “

“அக்பர் படைகள் பற்றியத் தகவல் வரும்வரை யுத்தத்திற்கான முகாந்திரம் ஏதுமில்லையே அரசே”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.