(Reading time: 10 - 20 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

பார்க்க நீங்களும் வர்றீங்க இல்லை....”

“கண்டிப்பா வர்றேன் சார்... அந்த மணி மேட்டர் திரும்பி எடுத்து கிளர்றாங்க போல... ஏன் சார் தேவை இல்லாம இப்படி சின்ன மேட்டர்ல எல்லாம் நீங்க போய் பண்ணினீங்க...”

“எல்லாம் எனக்கு வந்து பொறந்திருக்கு பாருங்க... அந்த பையனால வந்தது.... அந்த பொண்ணு பின்னாடி சுத்தி போட்டோ எடுத்து அதை அந்த பொண்ணுகிட்ட கொடுத்து வச்சிருக்கான்... அதை வச்சு அந்த பொண்ணு கல்யாணம் பண்ணுன்னு ஒரே தொல்லை கொடுக்க ஆரம்பிச்சுது... அதுதான் ஆளை வச்சு போட்டுத் தள்ளியாச்சு... என்னோட அந்தஸ்த்துக்கு எங்க வீட்டுல வேலை செய்யக்கூட அந்த பொண்ணுக்கு தகுதி கிடையாது... இதுல மருமகளாக பார்த்தா விடுவேனா....”

“சார் எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க.... கேஸ் எடுத்திருக்கறது நம்ம சந்திரன் சார்.... அவரோட ஜூனியர் ரெண்டு பேரும் செம்ம திறமைசாலிங்க... எப்படியாச்சும் உண்மை கண்டுபிடிச்சுடுவாங்க...”

“இந்த விஷயத்துல சந்திரன் இல்லை அவரோட சீனியர் வந்தாக்கூட நாங்க மாட்ட மாட்டோம்... அந்தளவு பக்காவா பிளான் பண்ணி பண்ணினது... அதுவும் இல்லாம ஸ்டேட்ல ஆரம்பிச்சு சென்ட்ரல் வரைக்கும் என்னைக் காப்பாத்த ஆள் இருக்கு... அப்புறம் என்ன கவலை...”

“டாக்டர் ஷேக் என்னைக்கு கிளம்பறாரு...”

“அவர் ஒரு மாசம் இங்கதான் இருக்க போறார்.... உடம்பு கம்ப்ளீட்டா சரியான பிறகுதான் போகப்போறார்... அவருக்கு கிட்னி கிடைக்கத்தான் ரொம்ப கஷ்டமா போச்சு... நல்ல காலம் சரியான நேரத்துல அந்த பையன் மாட்டினான்....”

“ஹ்ம்ம் ஆமாம் சார் ... சரி நாம கிளம்புவோமா சார்... லேப் போயிட்டு போக டைம் சரியா இருக்கும்....”

மூவரும் கிளம்புவது வரை முதலில் ஓடிய வீடியோவில் பதிவாகியிருந்தது.... அது முடிந்தவுடன் அடுத்து ஹோட்டலில் பதிவாகியிருந்தது ஓட ஆரம்பித்தது....

“வாங்க சார்... சார் உங்களுக்காகத்தான் ரொம்ப நேரமா காத்திருக்காரு...”

மூவரும் உள்செல்ல அங்கு ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருந்தார்... அவர்களின் ஆங்கில உரையாடல் தமிழில்...

“வாங்க வாங்க.... டைம் கரெக்டா கீப் அப் பண்றீங்க நீங்க... வெரி குட்...”

“காலம் பொன் போன்றது இல்லையா... அதை வீணாக்கக் கூடாதே... ஓகே... உங்களுக்கு இங்க எதுவும் தொந்தரவு இல்லையே....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.