(Reading time: 8 - 16 minutes)
Kaarigai
Kaarigai

இல்லாமல் தான் அங்கு உட்கார்ந்திருக்கிறான் என்று புரிந்ததால் அவளின் தயக்கத்தை முடிந்தவரை ஒதுக்கி வைத்து விட்டு இவள் எழுதிய கணக்குகளை அவனிடம் நீட்டினாள்.

சிறிது நேரம் உன்னிப்பாக அதை பார்த்தவன், "என்ன பண்ணலாம்னு இருக்க பவித்ரா?" என்றான் அவளின் முகம் பார்த்து.

"சில அடிப்படை தேவைகள் உடனடியா செய்ய வேண்டியது இருக்கு. அதெல்லாம் இந்த லிஸ்ட்ல இருக்கு" என்று ஒரு பேப்பரை அவனிடம் நீட்டினாள்.

"இதெல்லாம் செய்ய கையிருப்பு பத்தாது. சில டோனர்ஸ் கிட்ட கேட்டு பாக்கலாம். ஆனா எனக்கு டோனர்ஸ் மூலமா வரும் இன்கம் மட்டும் நம்பி இல்லாம ஆஸ்ரமத்தின் இன்கம்மை அதிகபடுத்த ஏதாவது பண்ணனும்." -பவித்ரா

"ஹ்ம்ம்...அதுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?" -சத்யா

"ஆஸ்ரம பெண்கள் இப்போ செய்ற சின்ன சின்ன வேலையை கொஞ்சம் பெரிய அளவுல பண்ணலாம். ஆனா அது அவ்ளோ சுலபமில்லை. அதுக்கு ஆரம்ப இன்வெஸ்ட்மென்ட் அபப்டினு ஒரு தொகை வேணும். இப்போ ஆஸ்ரமம் இருக்குற நிலைல கைல இருக்கற காசை வெச்சு இதெல்லாம் பண்ண முடியாது. பட் அப்படி செஞ்சோம்னா அங்க இருக்கும் பெண்கள் வாழ்க்கை முழுதும் ஆஸ்ரமத்தை நமபி இருக்க வேண்டியது இல்லை. அவங்களுடைய சொந்த காலுல நிக்க முடியும். அவங்களுடைய வாழ்க்கையை ஆஸ்ரமத்துலயே முடிச்சுக்காம அவங்க ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கலாம்." -பவித்ரா சொல்ல சொல்ல சத்யாவுக்கு அவளை நினைத்து பெருமையாக இருந்தது. அதை அவன் சொல்லவும் செய்தான்.

"எக்ஸலெண்ட் பவித்ரா. உன்னுடைய இந்த ஐடியா ஆஸ்ரம பிரச்னையை மட்டும் தீர்க்காது. அங்க இருக்கற பெண்களுக்கு வேற ஒரு வாழ்க்கையையும் அமைச்சு தரும். ஐ ரியலி லைக் இட்." சத்யா உணர்ந்து சொல்ல, முதன் முதலில் அவனிடம் கிடைத்த பாராட்டு என்பதாலோ என்னவோ அது சொல்லமுடியாத ஒரு உணர்வை உண்டாக்கியது பவித்ராவின் மனதில்.

"சரி இதை பத்தி நாம நாளைக்கு பேசுவோம். இப்போ லேட்டாச்சு. நீ தூங்கு. நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கறேன்" என்று சத்யா சொல்லவும் சரி என தலையை அசைத்தவள் அந்த பேப்பேரை எல்லாம் வாங்கி அந்த பைல்லில் வைத்தாள்.

அவள் எல்லாம் எடுத்து வைக்கும் வரை அங்கேயே சத்யா நிற்க, அவனுக்கு இரவு வணக்கம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் ஒவ்வொரு பேப்பராக மெதுவாக எடுத்து வைத்து கொண்டிருந்தாள் பவித்ரா.

"நமக்காக யோசிக்கிறேன் அப்படினு சொல்லறாரு. ஒரு குட் நைட் சொல்றதுல தப்பு இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.