(Reading time: 12 - 24 minutes)
Nenchil thunivirunthaal

பார்க்க முடியாதுடா!" தன் மனவெண்ணங்களைப் பதிவேற்றி தற்காலிகமான மௌனத்தினை அங்கே நிலைநிறுத்தினார் இராகவன். அவனது பார்வை பதிலளிக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தது.

"இப்படி அமைதியா இருப்பதால் அம்மா கோபம் போயிடுமா? நான் இப்போ உங்களுக்காகவோ, அம்மாக்காகவோ வரலை! அப்பா...அது...உங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்! நீங்க ஒண்ணு சேருங்க இல்லை கடைசி வரை தனியாகவே இருங்க...இப்போ அது இல்லை பிரச்சனை! இப்போ நான் வந்தது...என் தம்பிக்காக! உங்களுக்கும், அம்மாக்கும் அடுத்த ஸ்தானத்துல அவனுக்கு நான் தான் இருக்கேன்! அவ இதுவரைக்கும் என்கிட்ட எதையும் தேவைன்னு கேட்டதில்லை. இப்போ அப்பா வேணும்னு கேட்டு இருக்கான்." என்ற வாக்கியம் அவர் உதிர நாளங்களில் ஓடும் செங்குருதியை சில்லிட வைத்தது.

"கிளம்பி வாங்க! நான் வேணும்னா அம்மாவை அங்கிருந்து கிளம்ப சொல்றேன்!" என்றதும் பதறியப்படி தடுத்தார் இராகவன்.

"வேணாம்! நான் வரேன்!" விழிகளைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டார் அவர். அவனோ, இல்லை அவரோ ஆதித்யாவின் மேல் பதிந்த அந்த வக்கிரப் பார்வையை சற்றும் கவனிக்கவே இல்லை.

எவ்வளவு விரைவாக வாகனத்தினை செலுத்த இயலுமோ அவ்வளவு விரைவாக செலுத்தினான் ஆதித்யா. அவன் ஏதும் பேசவில்லை, பேசவும் விழையவில்லை. மகனின் அருகாமை யாசித்த தந்தையின் மனதிலே வாழ்வின் தவப்பயனை பெற்ற இன்பமானது சுரந்துக் கொண்டிருந்தது. அவர் மகன் வெகு அருகில் இருக்கிறான். பலக்கால தவம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அவரின் பார்வை தன் மேல் பதிந்திருப்பதனை ஆதித்யா உணராமல் இல்லை. அவன் மனதிலும் பாசமோ, அக்கறையோ இல்லாமல் இல்லை. எனினும், அதனை வெளிக்காட்ட அவன் விழையவே இல்லை.

"ஆதி..! அப்பா மேலே இன்னும் கோபமா இருக்கியா?" கதிரொளி மறைந்த பின் வாடும் மூடும் தாமரை இதழ்களாய் வாடியிருந்தது இராகவனின் முகம்!

"நான் அன்னிக்கே பதில் சொல்லிட்டேன்பா! நான் உங்களை மன்னிக்கிறது ஒரு விஷயமில்லை. எனக்கு எந்த ஏமாற்றமும் நடக்கலை. ஏமாற்றம் நடந்தது அம்மாவுக்கும், உடையானுக்கும் தான்! ஒருவேளை...அந்தச் சம்பவத்துல நீங்க உண்மை ஏற்றிருந்து இரண்டாவது கல்யாணம் பண்ணிருந்தா கூட அவங்களை நான் இன்னொரு அம்மாவா நினைத்து வாழ்ந்திருப்பேன்!" ஏனோ மனதில் ஓர் அழுத்தம் ஏற்பட்டதனை உணர்ந்தார் இராகவன். ஆழ்கடல் அமைதியென நிலவியது சில நேர மௌனம்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.