(Reading time: 7 - 13 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

உண்மையிலேயே உயர்ந்தவங்க!"

" உங்களுக்கு 'காந்தி'னு பேரு உங்களைப் பெத்தவங்க அழகா வச்சிருக்காங்க! அந்தப் பேருக்கே ஒரு வசிகரம் உண்டு! மனசு ஓடிப்போயிடும், ஆத்மசக்தி ஆட்சி பண்ணும் நம்மை!"

" எனக்கு இந்தப் பேரை என்னைப் பெத்தவங்க வைக்கலே, எங்க குடும்பத்தை வாழவைத்த ஒரு ஐயருதான் வைத்தார்னு என்னைப் பெத்தவங்க சொல்வாங்க, பெருமையா!"

"அப்படியா!"

" அவரு எங்க கிராமத்திலே பெரிய பண்ணையார்! பிறப்பிலே உசந்த சாதி, ஐயரு! நாங்க அவர் பண்ணையிலே வேலைசெய்த ஆளுங்க, ஒதுக்கப்பட்ட சாதி!

என்னை பண்ணையார் தன் வீட்டிலேயே தன் பிள்ளைங்களோடு சேர்த்து வித்தியாசமில்லாம வளர்த்தார்.

அவர்தான் எங்களுக்கு கண்கண்ட சாமி!

என்னை பி.ஏ. வரையிலும் படிக்க வைத்தபிறகு, 'மேற்கொண்டு என்ன செய்யப்போறே? படிக்கப்போறியா, வேலைக்குப் போறியா, தொழில் நடத்தறியா?ன்னு கேட்டாரு......."

" கண் கலங்காதீங்க, பெரியவரே! மேற்கொண்டு சொல்லுங்க!"

" ஏதாவது தொழில் பண்றேன்னு சொன்னேன், ஏன்னு கேட்டாரு, சுயமா வாழலாம், நாலுபேருக்கு நல்லது செய்யலாம், நாலு ஏழைங்களுக்கு வேலை போட்டுக் கொடுத்து, அவங்க குடும்பங்களை வாழவைக்கலாம்னு சொன்னேன்,........."

"சரியாத்தான் சொல்லியிருக்கீங்க!"

" நீங்க நம்பினா நம்புங்க, இல்லேன்னாலும் பரவாயில்லே!

அவரே என்னை அழைச்சிகிட்டு இந்த ஊருக்கு வந்து, அந்தக் காலத்திலே பத்து லட்சம்னா இந்தக் காலத்து பத்து கோடிக்கு ஈடு!

பத்து லட்ச ரூபாய் முதலீடு போட்டு தொழில் துவக்கிக் கொடுத்தார்.

என்ன தொழில் தெரியுங்களா?

கிராமங்களிலே இருந்து விவசாயிகள் தினமும் கொண்டு வருகிற கறிகாய்களை, பழங்களை, மலர்களை, நியாயமான விலைக்கு வாங்கி, நகரத்திலே கறிகாய் விற்கிற சிறுதொழில் வியாபாரிகளுக்கு நியாயமான விலையிலே விற்கிற மொத்த வியாபாரம்!

பெரியவர் கைராசி, இல்லை இல்லை, நல்ல மனசு, வியாபாரம் அமோகமா நடந்தது, தானாகவே பணம் குவிந்தது, .......

பணத்தை எடுத்துக்கொண்டு போய் பெரியவரிடம் கொடுத்தேன்!

வாங்கிக்க மறுத்துட்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.