(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ஆனாலும் ஏனோ அவளிடம் கோபத்தை காட்ட அவனுக்கு விருப்பமில்லை. அவளோ கோபத்தில் அவனை முறைத்துக் கொண்டு வேகமாகமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

 அவளை பார்க்க அவனுக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது. இது மாதிரி வேறு யாராவது அவனுடன் பேசி இருந்தால் நிச்சயம் அவன் பதில் பேசி இருக்க மாட்டான். மாறாக அவன் கை அவர்களின் கன்னத்தில் பதிந்து பதிலை கூறியிருக்கும்.

கீழே விழுந்த புத்தகத்தை  எடுத்துக் கொடு என்று அவள் கட்டளையிட தானாக குனிந்து புத்தகத்தை எடுத்து அவள் கைகளில் கொடுத்தான்.

 புத்தகத்தை வாங்கியவள் சிட்டாய் ஓடி மறைந்தாள். யாராக இருக்கும் என்று அவன் யோசிக்க  அதற்குள் டிரைவர் வந்து தம்பி என்று அழைக்க தன் காரை நோக்கி நடந்தான்‌

 காருக்குள் அமர்ந்து இருந்தவனுக்கு அந்த பெண்ணின் முகமே நினைவு வந்தது.  சிறு பெண்... சரியா சுட்டித்தனமான பெண்... என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவள் எதிர்த்து வாயாடியது நினைவுக்கு வர அவனுக்கு கோபம் வந்தது.

 என்னை எதிர்த்துப் பேசினது மட்டுமில்லாமல் என்னையே வேலை செய்ய வைத்து விட்டாய் அல்லவா... உன்னை என்ன செய்கிறேன் பார் என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டான். கார் வீட்டை அடைந்த போதும் அவனுக்கு இன்னும் அவள் தன்னை எதிர்த்துப் பேசியது கோபத்தை வரவழைத்து.

 குள்ள வாத்து குள்ள வாத்து என்று திட்டி கொண்டே உள்ளே நுழைந்தான்.

 என்ன தம்பி... யார் அந்த குள்ள வாத்து என்று ராமு கேட்டதற்கு பிறகு தான் வீட்டுக்கு வந்து விட்டதை உணர்ந்தான்.  ராமு ராகவேந்திரன் வீட்டு வேலை செய்பவர். சமையல்காரர். 

ராகவேந்திரன் பல சமயங்களில் தோழனாக பேசிக்கொள்வது ராமுவிடம் மட்டுமே. ஆனால் ராகவேந்திரரின் தாய் புஷ்பாவிற்கு ராகவேந்திரா ராமுவிடம் பேசுவது சுத்தமாக பிடிக்காது.

 அதனால் அம்மாவிற்கு தெரியாமல் மட்டுமே ராமுவிடம் பேசுவான் ராகவேந்திரன். அம்மா என்றாலே கொள்ளைப் பிரியம் ராகவேந்திரனுக்கு. வீட்டில் யார் என்ன சொன்னாலும் பதிலுக்கு பதில் சரியாக பேசி‌ விடுவான். ஆனால் தன் தாய் சொல்வது தவறாக இருந்தால் கூட அதை அப்படியே ஏற்றுக்கொள்வான். அந்த அளவிற்கு தாய் மீது பிரியம்.

 குள்ள வாத்து குள்ள வாத்து என்று அவளை திட்டிக்கொண்டே நுழைந்தது ராமுவிற்கு காதில் தெளிவாக விழுந்தது. யாராயிருக்கும் இந்த குள்ள வாத்து என்று எண்ணிக்கொண்டே அவனுக்கான தேநீர் போட்டுக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தான் ராமு.

 தம்பி ...என்று பேச்சை ஆரம்பிக்க அந்த நேரத்தில் சரியாக வந்தாள் புஷ்பா‌

 

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.