(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

 இதற்கு மேல் இங்கு நிற்பது நல்லதல்ல என்பதை புரிந்து கொண்ட ராமு சமையல் கட்டிற்குள் நுழைந்து விட்டான்.

 ராகவ் அப்பா உனக்காக தோட்டத்தில் காத்திருக்கிறார். என்னிடம் ஏதோ பிஸினஸ் பற்றி பேச வேண்டுமாம். சீக்கிரமா போ என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள். 

 வேகமாக தன் அறைக்கு சென்று தன்னை ரெப்ரஸ் செய்து கொண்டு தோட்டத்திற்குச் சென்றான். தன் அப்பாவிடம் பிசினஸ் பற்றிய பல காரியங்களை பேசி விட்டு திரும்பியவன் கண்களில் தாய் மடியில்  படுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கும் தன் தங்கை சரண்யாவும் தன் பாட்டியிடம் வம்பு இழுத்துக் கொண்டிருக்கும் சரனும் பட்டார்கள்.

 அவர்கள் எல்லாம் தன் குழந்தை தனத்தை எவ்வாறு அனுபவிக்கிறார்கள். ஆனால் நான் மட்டும் ஏன் சிறுவயதிலேயே பிசியாக இருந்து விட்டேன் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 ஒருவேளை தனக்கு இந்த பாசம் கிடைக்கவில்லையா.... அல்லது தனக்கு கிடைக்கயிருந்த பாசத்தை நாம் தான் பிசினஸ் பிசினஸ் என்று கெடுத்துக் கொண்டோமா என்று எண்ணிக்கொண்டே அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.

 அந்த ஊஞ்சல் ஆடுவது அவனுக்கு தன் தாய் தனக்கு தாலாட்டு பாடுவது போலவே இருந்தது. ஆனாலும் அவன் மனதிற்குள் ஒரு குறை இருந்தது. தாய் மடியில் தலைவைத்து படுத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணத் தொடங்கியவன் ஊஞ்சல் கம்பிகளில் தன் தலையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடினான்.

 கண்களை மூடியவனுக்கு அந்த குள்ள வாத்து தெரிய ஏனோ அவள் மீது ஒரு வெறுப்பு தோன்றியது. 

ஊஞ்சலில் இருந்து இறங்கி அவன் அங்கிருந்து விறுவிறுவென்று தன் அறைக்கு சென்றான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராமுவிற்கு அவன் இயல்புக்கு மாறாக நடந்து கொள்வது புரிந்தது. யாராக இருக்கும். யார் மீது இவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

 அதே நேரத்தில் சாலையோரத்தில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த அந்த சிறுமி தன் இல்லத்தை அடைந்தாள். தெரசா ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயர் பலகையில் உள்ள அந்த கட்டிடத்துக்குள் அந்தப் பெண் நுழைந்தாள். (வாருங்கள் நாமும் சென்று அவள் யார் என்று பார்த்துவிட்டு வருவோம்).

 தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்தவர் அம்மாடி  முதல் நாள் ஸ்கூல்க்கு போயிருக்கிற ஸ்கூல் பிடிச்சிருந்தா என்று கேட்க, அவளோ நெட்ட கொக்கு நெட்ட கொக்கு

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.