(Reading time: 8 - 15 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார். இதனால், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது. குயிலியின் வாழ்வும் முடிந்து விட்டது.

ஆனால் ஆங்கிலேயரின் எண்ணங்கள் சிதைந்துவிட்டது. அவர்களின் சதி தந்திரங்களும் அழிக்கப்பட்டுவிட்டது. நாட்டிற்காக தன் உயிரை தியாகம் செய்தாள் குயிலி... 

வாழும் வாழ்க்கை ஒரு முறை.. அதை நாட்டின் நன்மைக்காக வாழ வேண்டும். நீயும் துஷ்டர்களுக்கு அஞ்சாத வீரப்பெண்ணாக வாழ வேண்டும் என்று தான் குயிலி என்று பெயர் வைத்தோம். 

எங்கு பிறந்தோம் என்பது முக்கியமில்லை. வாழ்ந்து முடிக்கும் போது எப்படி வாழ்ந்தோம்  என்பதே முக்கியம். புரிந்ததா... எனக்கு ஒரு சத்தியம் செய்.. எங்கள் கடமையை நாங்கள் பாதியில் விட்டாலும் நீ அதை செய்து முடிக்க வேண்டும் என்று தன் கையை நீட்ட குயிலியும் சத்தியம் செய்தாள்.

உனக்கு கார்த்திக் துணை இருப்பான் என்று யாரோ தன்னிடம் பேசியது நினைவு வர அப்படியே அமர்ந்து விட்டாள் குயிலி...

அவள் கண்கள் மட்டும் நீரை பொழிந்து கொண்டிருந்தது. விரல்கள் கண்ணீரை துடைக்க மறந்து விட்டது. 

மனமோ நான் என் அம்மாவிற்கு வாக்கு கொடுத்து இருக்கிறேன். அதை எப்படி நிறைவேற்றுவது. நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு யார் உதவி செய்வார் என்று பலமான சிந்தனையில் ஆழ்ந்து இருந்தது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ராகவ்விற்கு தூக்கம் கலைந்தது. ஏதோ ஒரு கலக்கம் தோன்ற மெதுவாக கண் திறந்தான்.

வலியின் தாக்கம் குறைந்து இருந்ததை உணர்ந்தான். மெதுவாக எழுந்து அமர்ந்தவன் குயிலியை தேடினான்.

அவள் அறையில் இல்லை என்பதை உணர்ந்தவன் எழுந்து வெளியே வர பால்கனியில் கால் முட்டியில் முகம் புதைத்து அமர்ந்து இருந்தவளை கண்டு குயிலி என்றான்.

அவளிடம் இருந்து பதில் வராததைக் கண்டு அவள் அருகில் அமர்ந்தவன் அவள் தோளை அசைக்க தொலைத்து விட்ட கடந்த காலத்தை தேடிக் கொண்டு இருந்தவள் பதற்றத்துடன் அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.

அவனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. இவளுக்கு அழ கூட தெரியுமா என்று...

அவனது வெற்று மார்பில் முகம் புதைத்து விம்மிக் கொண்டு இருந்தவளின் தலையை ஆதரவாக தடவி கொடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.