(Reading time: 9 - 18 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

காத்திருந்து செய். நீயா அவசரப்பட்டு எதையாவது செய்து வைக்காதே... புரிஞ்சுதா என்று சத்யா சொல்ல அவனும் சரி என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 சத்யா மீண்டும் தன்னுடைய மொபைலில் யாரையோ அழைத்தான்.

அண்ணா

சொல்லு சத்யா

உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். குயிலிக்கு பழைய விஷயங்கள் எல்லாம் தெரிந்து விட்டது என்று நினைக்கிறேன். அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்று தெரியவில்லை. இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும். நம்முடைய ஆட்கள் எல்லாம் அந்த தெருவில் தான் அவளை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவளை போடவும் தயாராக இருக்கிறார்கள். அவள் கதையை முடித்துவிடலாமா... காத்திருக்க வேண்டுமா... உங்களது பதிலை கேட்டு நான் சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். நான் அவர்களிடம் என்ன பதில் சொல்ல வேண்டும்.

அவர்களைக் காத்து இருக்க சொல்லு சத்யா... எனக்கு தெரிந்து அவள் நிச்சயம் மீண்டும் அந்த கிராமத்திற்கு தான் செல்லுவாள். அவளுக்கு உண்மை எந்தளவு தெரிந்திருக்கிறது என்று தெரியவில்லை. நமது ஆட்களை பின்தொடர சொல். அடுத்து அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்பதை கண்காணிக்க சொல்லிக்கொண்டே இரு. இப்போதைக்கு அவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற முடிவை ஒதுக்கி வை. அவள் ஒருவேளை நமக்கு தேவைப்படலாம். கொஞ்சம் அதிகமாகவே கவனமாக இருக்கவேண்டும். நடந்ததெல்லாம் உனக்கும் தெரியும் அல்லவா... மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... புரிந்ததா என்றான் பிரதாபன் .

புரிந்தது... அவள் யாரோ ஒரு ஆளை போய் பார்த்து விட்டு வந்திருப்பாள் போல சாயங்காலம். ஆனால் அங்கு என்ன நடந்தது என்று எதுவும் தெரியவில்லை.  அங்கிருந்து அவளுக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா என்று ஏதாவது அலசிப் பார்க்க வேண்டும் அண்ணா..

ஆசிரமத்தில் இருக்கும் ஆசிர்வாதத்தையும் கண்காணிக்க சொல்... அந்த ஆள் தான் அவளுக்கு ஏதாவது உண்மையை சொல்ல முடியும்.

சரி அண்ணா... நீங்கள் சொன்ன மாதிரியே செய்கிறேன் என்றவன் அடுத்த வேலையை செய்ய ஆட்களிடம் பேச சென்றான்.

இரவு நடுநிசி நேரம்... ஆனால் முழு பௌர்ணமி ஒளியால் ஊரே பகல் போல விழாக்கோலம் பூண்டிருந்தது... இருள் என்பதே இல்லாமல் பார்க்குமிடமெல்லாம் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அனைத்து உயிர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க சில பேர் மட்டும்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.