(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தேனி....

 தாத்தா அந்த குன்று அருகில் செல்ல இது சமயமல்ல... இன்னும் ஒரு மணி நேரத்தில் மக்கள் அனைவரும் கீழே சென்று விடுவார்கள்‌. ஊரே திருவிழாக்கோலம் பூண்டு ஊர்வலம் செல்லும். அந்த நேரத்தில் இந்த கோவிலில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இல்லை இல்லை... இருக்காது என்றே சொல்லலாம். அது தான் நமக்கு சரியான நேரம். அந்த நேரத்தில் நான் உள்ளே செல்கிறேன். நீங்கள் இந்த கோவிலில் தியானம் செய்வது போல் அமர்ந்து கொள்ளுங்கள். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். நான் வரும் வரை இங்கு அமர்ந்து கொள்ளுங்கள் என்று ஓரிடத்தில் அமர வைத்தாள்.

 சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். கூட்டம் அனைத்தும் கலைந்தது. குயிலி மிக கவனமாக ஓவியம் இருக்கும் குன்றை நோக்கி முன்னேறினாள்.

 அவள் நினைத்தது போல எளிமையாக இருக்க வில்லை. இதுவரை யாரும் அங்கு சென்றதில்லை போல.... அதனால் பாதைகள் இல்லை. கரடுமுரடான பாதை சுவர்களுக்கு இடையே கவனமாக கால்களை ஊன்றி முன்னேறினாள். தொடர்ச்சியாக இருந்ததால் கஷ்டப்பட்டு கை கால்களில் சிறாய்ப்புகளோடு முன்னேறியவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 ஓவியம் இருக்கும் குன்றுக்கும் மலைக்கும் இடையே செங்குத்தான பள்ளத்தாக்கு இருந்தது.

கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. இருட்டாக இருந்த பள்ளத்தாக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நேரம் மனதில் இருந்த தைரியத்தை அசைத்துப் பார்த்தது அந்த இருள் பள்ளத்தாக்கு.

 உடல் வியர்த்து கைகளில் நடுக்கம் பரவியது. முடியாது என்ற எண்ணம் மனதில் உதிக்க அறிவும் தளர்ந்து போனது.

 திரும்பிப் போய்விடலாம் என்று தலையை திருப்பி மலைக்கோயிலை பார்த்தவளுக்கு தலைசுற்ற ஆரம்பித்தது. இவ்வளவு ஆபத்தான இடத்தையா தாண்டி வந்திருக்கிறோம் என்ற ஆச்சரியம் தோன்றியது.

 இனி திரும்பி செல்ல இயலாது என்று தோன்ற  ஒரு நொடி கண்களை மூடியவள் கண் முன்னால் தாத்தாவின் முகம் தெரிந்தது.

 தனித்து விடப்பட்டு "முடியாது" என்று நினைக்கையில் ஒன்றை நினைத்துக் கொள். "நீ முடியாது என்று நினைப்பதை இதற்கு முன் ஒருவர் செய்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல இனியும் ஒருவர் செய்து முடிப்பார் என்பதை மறவாதே" என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது.

 எனக்கு தேவையான விபரங்கள் அந்த ஓவியத்திற்கு அருகில் உள்ள சிலைகளில் மறைந்திருக்கிறது என்றால் இதற்கு முன்னால் ஒருவர் சென்று தானே மறைத்து வைத்திருக்க

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.