ஒரு மாதம் கழித்து....
தபால்... தபால்...
சந்தியா வாசல்ல தபால்காரர் கூப்பிடுகிறார்... போய் பாருடி...
ஒரு சீரியலை கூட ஒழுங்கா பார்க்க விடமாட்டார்களே என்று அலுத்துக்கொண்டே எழுந்து சென்றாள் சந்தியா.
சந்தியா என்கிற பெயருக்கு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்து இருக்கிறது.
என்ன... என் பெயருக்கா....
சந்தியா என்கிறது உங்க பெயர் என்றால் உங்களுக்கு தான்.
என்ன தபால்ஸ்... ஊருக்கு புதுசா...
ஏன் உங்க ஹிஸ்டரி தெரிந்தால்தான் போஸ்ட் தரனுமா...
நீ ரொம்ப பேசுறியே... உனக்கு நான் யாரென்று காட்டனும் போல...
நான் யாரென்று நீங்கதான் தெரிஞ்சுக்கணும் என்றவன் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
போஸ்ட்டை தந்து விட்டு போ...
முதல்ல மரியாதை கொடுங்க... அப்புறம் போஸ்ட கேளுங்க என்றவன் ஒரே வேகமாக அழுத்தி அவள் கண்ணில் இருந்து மறைந்தான்.
ஏண்டி... போஸ்ட் வாங்கிட்டு வா என்றால் இப்படி போஸ்ட்டை பார்த்துகிட்டு நிக்கிறியே... யார் கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு.
யாருக்கு தெரியும்... அவன் போஸ்ட்டை தராமல் போய்ட்டான்.
அடியே கொஞ்சம் மரியாதையா பேசுடி... அவன் கிட்ட உன் சேட்டையை காட்டிட்டீயா... உன்னை எல்லாம் என்ன செய்வது...
என்ன செய்வது இருக்கட்டும்... அவனை பற்றி சொல்லு. ஊருக்கு புதுசா...
அவன் ஊருக்கு புதுசு இல்லை... இங்க வந்து ஒரு வருஷம் ஆகுது. அடுத்த தெருவில்தான் இருக்கிறான். அவனைப் பார்த்து படிடீ... படிச்சோமா... வேலைக்கு வந்தோமானு இருக்கான். நீயும் படிச்சியே ... ஏதாவது வேலைக்கு போகலாம்ல... உன்னைவிட சின்ன வயசா தான் இருப்பான். எப்படி பொறுப்பா இருக்கான் பாரு என்று சொல்ல கடைசி வாக்கியத்தை பிடித்துக்கொண்டாள் சந்தியா.
என்னை விட சின்ன வயசுன்னு தெரிஞ்சுதான் ஒருமையில் பேசினேன். ஆனால் அவன் என்னன்னா எனக்கு போக்கு காட்டுறான். இப்போ போஸ்ட் வருதா... வரலையான்னு யார் அழுதா... நமக்கு போஸ்ட் பன்ற அளவுக்கு முக்கியமானவங்க யாரும் இல்லை அதனால்
Ennadu nirutha poriya
Inga ukandute epudi
Adan tiket irukula kelambu kelambu
Thank you.
Janu and kuyili rendu periyum gun point la nikka vachittu sorry ketkuringale ji
No issues jeba ma'am take it per your comfort.
.stress out aga venam 👍
Good night 😍