உங்களுக்கு இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ் பேப்பரை ரீ-எக்ஸாம் வைக்கப் போறாங்க!
ஓ வென்று மறுமுறையும் சோகக் குரலில் ஒரு கோரஸ் எழுப்பினர் மாணவர்கள்
ஏன் மேம் எனக் கேட்கவும்
ரொம்ப நடிக்காதீங்க! உங்க எல்லாருக்கும் கொஸ்டீன் பேப்பர் அவுட்டாகி, ஈசியா எழுதிட்டீங்க. யாரோ அண்ணா யுனிவர்சிட்டில புகார் பண்ணிருப்பாங்க போல. அதான் மறுதேர்வு எல்லாம்.
எவனாவது கொஸ்டீன் பேப்பர் கிடைக்காதவனா இருப்பான் என ஒரு மாணவன் சொல்லவும்,
அது எவனோ, இந்த தடவை உங்க கிளாஸ் ரூம்ல தான் எக்ஸாம் நடக்கப் போகுது. அடுத்த வியாழன் எக்ஸாம். ஹெச்ஓடி சார் செவ்வாய், புதன் கிளாசஸ் இல்லைன்னு சொல்லிட்டார். இந்த தடவை பைனல் இயர் ரிசல்ட் வேற மோசமா வந்திருக்கு. நீங்க எல்லாரும் நல்லாப் படிங்க. என்றவாறு வகுப்பில் இருந்து வெளியேறினார்.
அந்த திகிலான வியாழனும் வந்தது. இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ் மறுதேர்வுக்கு ஆயத்தமாக அனைவரும் அமர்ந்திருந்தனர். கேள்வித்தாளை ஆசிரியை கொடுத்துச் சென்றபின்னர், மேடையில் நின்று கொண்டிருந்தார். மிகவும் கடினமான கேள்வித்தாள் அது. முதலில் பயந்து போன ரம்யா, தெரிந்த மட்டும் தேர்வை நன்கு செய்வோம் என்று முயன்று கொண்டிருந்தாள். ஒரு முறை வகுப்பில் பார்வையை சுழல விட்டாள். ஒவ்வொருவரும் அதே போல் ஏதாவது தெரியுமா என்று அடுத்தவரிடம் கண்களால் வினவிக்கொண்டு இருந்தனர். மூன்று மணிநேரம் பரீட்சைக்கு முக்கால் மணி நேரத்திலேயே சிலர் விடைத்தாளைக் கொடுத்துவிட்டு வெளியேறினர். பரீட்சை முடிந்ததும், யாரோ ஒருவர், இந்த தடவை எல்லாருமே பெயில் தான் என்று சொல்ல, கொல்லென்று அனைவரும் சிரித்துவிட்டு வகுப்பை விட்டுக் கிளம்பினர்.
கண்மணியும் தானும் சுமாராகவே செய்திருப்பதாக ரம்யாவிடம் சொன்னவள், ஏதோ நம்ம மேல கொஞ்சம் பரிதாபப்பட்டு எல்லாரையும் பாஸ் பண்ணிவிட்டா புண்ணியமாகப் போகும் என்றாள். வீட்டுக்குள் நுழைந்த ரம்யாவிடம், “இந்த தடவை இந்த பேப்பரை நீ நல்லா எழுதி இருக்கியா? ஏன்டா ரம்யா?” என்று அம்மா கேட்டதும் தான் தாமதம், பொரிந்து தள்ளினாள். “செமெஸ்டர் எக்ஸாம் நடக்கிறப்போ எப்பவுமே நான் காலைல சாப்பிடமாட்டேன்னு சொன்னேன். நீங்க தான் இன்னிக்கு நான் சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும்னு கம்பெல் பண்ணீங்க. அதுலயே என்னோட சென்டிமென்ட்டை நீங்க ப்ரேக் பண்ணிட்டீங்க! போதாக்குறைக்கு இந்த ரகு எருமை மாடு வேற, நீ இந்த பேப்பர்ல கண்டிப்பா புட்டுக்க தான் போறன்னு சொன்னான். அது தான் நடக்கப்போகுது. கொஸ்டின் பேப்பர் ரொம்ப கஷ்டம். யார்கிட்ட வேணும்னாலும் கேட்டுக்கோங்க. நான் தூங்கப் போறேன்!” என்றவள் அப்படியே தரையில் ஹாலில் படுத்துத் தூங்கிவிட்டாள். “காண்டாக்ட் லென்ஸ் போட்டுட்டுத் தூங்காத ரம்யா!” அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள்
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
What next???
Thank you.