(Reading time: 9 - 17 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர்

திருமணம் முடிந்து அனைவரும் திரும்பி விட ஜனா ஜனனி இருவரும் ஒரே காரில் வீட்டை நோக்கி பயணித்தனர்.

தனுவையும் தன்னோடு அழைத்துச் செல்வதாக ஜனா சொல்ல ஸ்வீனாவோ நானும் வீட்டிற்கு தான் வருகிறேன். அதனால் தனு என்னோடு வரட்டும் என்று சொல்லி விட ஜனாவால் ஸ்வீனாவை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் போக அஸ்விட்டை பார்த்து முறைத்தான்.

ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் டிரைவர் அண்ணா வண்டி எடுங்க என்று சொல்ல ஜனாவோ கார் சாவியை அஸ்விட் கையில் இருந்து பிடுங்கி கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான். வேறு வழி இல்லாமல் ஜனனியும் முன் சீட்டில் அமர்ந்தாள்.

காரில் ஏறியதும் சீட் பெல்ட்டை போட்டவன் அவள் சீட் பெல்ட் போடுவதற்காக வெயிட் செய்தான். ஆனால் அவளோ ஏன் வெயிட் செய்கிறான் என்று தெரியாமல் யோசிக்க சீட் பெல்ட் போடு என்றான்.

அவளோ சீட் பெல்ட்டா என்று திறு திறுவென்று விழிக்க கண்ணை மட்டும் நல்லா உருட்டுறா... என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே அவளுடைய சீட் பெல்ட்டை மாட்ட மனம் கவர்ந்த கனவு நாயகனின் அருகாமை பெண்ணவளுக்கு நாணத்தை ஏற்படுத்த அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அவள் கன்னங்கள் சிவக்க உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டாள்.

அவளின் அருகாமை அவனுக்குள்ளும் ஏதோ செய்ய அவனோ நொடிக்குள் தன்னை சரி செய்து கொண்டு வெட்கப்பட்டு சிரிக்க இங்கே எதுவும் நடக்கவில்லை... நடக்கவும் செய்யாது... கனவு கோட்டை கட்டுறதை விட்டு விட்டு எங்கிட்ட இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசி என்று சொல்லி விட்டு காரை விரைவாக செலுத்தினான்.

வாகனங்கள் நிறைந்த நெரிசல் மிகுந்த சென்னை மாநகர சாலையில் அவன் ஓட்டும் விதம் அவளுக்குள் அச்சத்தை ஏற்படுத்த அவளோ கண்களை இறுக மூடி கொண்டாள்.

அவளின் பயம் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்க திடீரென வேகமாகவும் திடீரென மிதமாகவும் திடீரென மிக மெதுவாகவும் அவளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே ஓட்டினான்.

முதன் முறையாக ஜனாவிற்கு இந்த பயணம் புது விதமான ஒரு உணர்வை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் அவன் காரில் பயணத்தை தொடங்கும் போது கூட்ட நெரிசலான சாலையில் செல்வது அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறை சிக்னலில் காத்திருக்கும் போதும் அவனுக்குள் ஒரு வித கோபம் பரவி இயல்பை தொலைத்து விடுவான். ஆனால் இன்றோ பயணம் அவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதற்கான காரணம் என்ன என்று யோசிக்க அவனுக்கு விருப்பமில்லை. வழக்கமாக எப்போது வீடு வரும் என்று

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.