Page 7 of 11
சரி, நீயும் ஜெய்யும்ன்னு மட்டும் யோசிச்சாலும் அவன் சொல்ற வாழ்க்கை எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமா? பசின்னா என்னன்னு கூட தெரியாம வளர்ந்தவ நீ. படிக்க பணம் வேணும்னு வேலைக்கு போறவன் அவன்.”
“ஜெய் என்னை நல்லா பார்த்துப்பான் அத்தை”
“அதை தான் சொல்றேன் பாப்பா. அவன் உன்னை நல்லா பார்த்துக்க கஷ்டப்படுவான். முதல்ல சுகமா தெரியுற அந்த சுமை கொஞ்ச நாள்ல வலியா தெரிஞ்சா?
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்வரி இருட்டில் வட்டமாக தெரிந்த சீலிங் பேனின் ப்ளேடுகளின் நிழல் உருவத்தை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். அன்றும் சரி இன்றும் சரி அவள் சித்ரா அத்தை கொடுத்த அறிவுரையை தவறென்று நினைத்ததே இல்லை.