(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

வருவாங்க பாரு என்றான். அவனை முறைத்தவாறே, இருவரும் முகாமுக்கு சென்றார்கள். முதலில் உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. ரம்யா 44 கிலோவும், தேவி 46 கிலோவும் இருந்தனர். 50 கிலோவுக்குக் கீழே எடையுள்ள பெண்களிடம் ரத்தம் எடுக்க முடியாது என்று கிளம்ப சொன்னார்கள். ப்ளீஸ்க்கா நான்லாம் ஸ்ட்ராங்காத்தான் இருக்கேன். ஓ பாசிடிவ் க்ரூப்க்கா. ப்ளட் டொனேட் பண்ண ரொம்ப ஆர்வமா வந்திருக்கேன்க்கா என்று அங்கிருந்த என்.எஸ்.எஸ். வாலண்டியர் அக்காவிடம் ரம்யா கெஞ்ச, முடியவே முடியாது கிளம்புங்க என்றார்.

அங்கிருந்து ரம்யாவும் தேவியும் வெளியேறிய நேரம், அவர்களின் வகுப்பு மாணவன் ரஞ்சன் ரத்தம் கொடுத்துவிட்டு, கையில் ஒரு ஜூஸ் பாட்டிலை வைத்துக் கொண்டு வந்தான். என்ன ப்ளட் டொனேட் பண்ணவா வந்தீங்க, உங்களைப் பார்த்தா, ப்ளட் ஏத்த வேண்டிய மாதிரில இருக்கு என்றான். கிண்டல் பண்ணாதீங்கண்ணா! அவங்களே எங்களை அண்டர்வெயிட்டுனு துரத்திவிட்டுட்டாங்க. சரியாதான் சொல்லி இருகாங்க. முதலில் ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட்டு நீங்க  நல்லாத் தெம்பா இருங்கன்னு சொல்லிவிட்டு நடந்தான். ச்சே கிளம்பும்போதே கிண்டல் பண்ணாங்க. இப்போ ரொம்ப டேமேஜ் பண்ணுவாங்க. எப்படியும் மேம் கிட்ட பர்மிஷன் வாங்கியாச்சு, மிச்ச டைமை கேண்டீன்ல ஒரு ஜூஸ் குடிச்சு ஓட்டிட்டு அப்புறம் போவோம் என்றாள் தேவி. ரத்தமே கொடுக்கல ஜூஸ் குடிக்கவா என்றவாறே அவளுடன் கேண்டீனுக்குள் நுழைந்தாள் ரம்யா.

உள்ளே அவளே எதிர்பாராமல் அங்கிருந்த தினேஷ், என்ன இந்நேரம் இங்கே இருவரும் ஒரே நேரத்தில் ஒரே கேள்வியைக் கேட்க எத்தனிக்க, சிரித்து விட்டார்கள். இந்த ப்ளட் டொனேசன் கேம்ப் என்று ரம்யா ஆரம்பிக்க, வாலண்டியரா? எனவும்  இல்லை ரத்தம் கொடுக்கலாம்னு வந்தேன். கொடுக்க முடியாது எடை குறைவுன்னு அனுப்பிட்டாங்க.  இது தேவையா உனக்கு. முதலில் உன் உடம்பைத் தேத்து. யார்கிட்ட கேட்டு ரத்தம் கொடுக்க வந்த?

அம்மாட்ட கேட்டால் விடமாட்டாங்க. அம்மா கிட்ட மட்டுமில்ல என்கிட்டயும் கேட்கணும் தெரியும்ல, என்றான் அவளின் கண்களில் நேராய்ப் பார்த்து, நான் ஏன் கேட்கணும்? என்று ரம்யா சொல்லவும், தினேஷ் கொஞ்சம் குரலை உயர்த்தி, ஏன்னா நான் உன் ..ஷ் ஷ் கத்திராத, தேவி வர்றா, என்று அவன் சொல்ல வந்ததைத் தடுத்தாள். இந்தா நீ கேட்ட மாதுளை ஜூஸ்  அவளிடம் கொடுத்ததும் நான் அந்த டேபிளுக்குப் போறேன் என்று கைகாட்டிவிட்டுப் போய் அமர்ந்தாள். ராபின் ஜெராக்ஸ் எடுக்க வந்தான், எனக்கும் லைட்டா தலைவலி, டீ குடிக்க வந்தேன். அப்புறம் இன்னிக்கு ஒரு  சர்க்குலர் வந்தது, அதை வச்சு ஒரு ப்ளான் பண்ணிருக்கேன் என்றவனிடம், என்ன பிளான் என்றாள் ரம்யா ஆவலுடன்.  அவளிடம் ஷ் ஷ் என்றவன்,ரம்யா மறுபடியும் என்ன சர்க்குலர் வந்தது? என்ன ப்ளான்? என்று கேள்விகளை

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.