This is a Chillzee KiMo Special episode. To read the complete novel, please visit Chillzee KiMo.
வில்லேந்தல்… மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். வயலும் வயல் சார்ந்த இடமாக அது ஒரு அழகிய கிராமம். அங்கு பழமையான ஒரு கோவிலும் சுற்றி நிறைய சிறிய மச்சு வீடுகளும் இருந்தாலும்… பளிச்சென்று கண்ணில் பட்டது ஒரு அழகிய ஜமீன் பங்களா.
பெரிய இரும்பு கேட்… அதை கடந்தால் பூந்தோட்டம்….ம்… ரோஜா தோட்டம்… அதற்கு வலது பக்கத்தில் மூன்றடி உயர கிருஷ்ணர் சிலை… கழுத்தில் ரோஜா பூமாலை ஆட நின்றார். அவ்விடத்தில துளசி செடிகள் அவரை சுற்றி பாதுகாப்பு வளையமிட்டு நின்றன. மினி பிருந்தாவனம்.. அதை கடந்தால் வெளிர் பச்சை நிறம் பூசி பளபளத்தது நாட்டாமை வீரய்யன் தாத்தா வீடு.
எப்போதும் அமைதியாக இருக்கும் அந்த இடம் இன்று பேச்சு குரல்களால் கலவரப்பட்டு கொண்டிருந்தது. அங்கே என்ன நடக்கிறது?
"இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்" என்று ப்ரமோதா கிறீச்சிட்டாள்.. அவள்தான் வீரய்யன் தாத்தாவின் பேத்தி.
"எனக்கும் இதுல சம்மதம் இல்லை. ஆனால் இப்போதைக்கு எனக்கு வேற வழி இல்லை. பாப்பா. நம்மளோட நிலைமையை யோசித்துப் பார்க்கணும்"
"தாத்தா நமக்கு வயல் இருக்கு. அதுல விளைச்சலும் நல்லா வருது. தென்னந்தோப்பு, மாந்தோப்பு… இதிலிருந்தும் அப்பப்ப வருமானம் வருது. அப்புறம் பண பிரச்சனைனு ஏன் சொல்றீங்க?'
" நீ முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துவிட்ட. இந்த வருஷம் தென்னந்தோப்புல சரியா காய் விடலை. வருமானம் வரலை"
" சரிதான். ஆனால் நாம பேங்க்ல கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கோம்ல. அதை யூஸ் பண்ணிக்கலாம்ல"
This is a Chillzee KiMo Special episode. To read the complete novel, please visit Chillzee KiMo.
Nice start
Valthukal
nesam nalkum ........... story ena achu are u ok now entha problem ellaiye
Romba naal aalai kanome mam.