“நான் பிடிக்கலைன்னு சொன்னா என்ன செய்வீங்க??? திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிப்பீங்களா??” – அப்சரா அவனிடம் வினவினாள்.
“மேனகாவும், பாரதி சிஸ்டரும் உங்க கமன்ட்க்கு என்ன சொல்றாங்கன்னு கேட்பேன். அதுக்கு அப்புறம் முடிவு செய்வேன்” – சிவக்குமார் தயக்கமில்லாமல் பதில் கொடுத்தான்.
“நல்லா தான் பேசுறீங்க! உண்மையை சொல்றீங்களான்னு செக் செய்யவாவது ஏதாவது சொல்லி வெறுப்பேத்த ஆசையா தான் இருக்கு. ஆனால், ரொம்ப பசிக்குது. இதுக்கு மேல என்னால முடியாது. நீங்க இது தான்னு முடிவா சொல்லி எங்களுக்கும் அந்த பாவப் பட்ட பொண்ணுங்களுக்கும் விடுதலை கொடுத்திருங்க” – அப்சரா விற்பனைப் பெண்களை காட்டி சிவக்குமாரிடம் சொன்னாள்.
மெல்லியதாக வெட்கம் மின்னும் சிரிப்பை பதிலாக கொடுத்தான் சிவக்குமார்.
புடவைகள் வாங்கியப் பிறகு, நான்குப் பேரும் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.
“ப்ளீஸ், யாரும் கோபப் படாதீங்க. நகை வாங்குறதுக்கு முன்னாடி ஒரு ட்வென்டி டு தர்ட்டி மினிட்ஸ் எனக்கு வேணும். ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. தீபக், அபிஷேக் கிட்ட கட்டாயம் ஜாயின் செய்வேன்னு சொல்லி இருந்தேன். நான் கார்ல இருந்து அட்டென்ட் செய்திருவேன். நீங்க???“ சிவக்குமார் மூன்று பெண்களிடமும் கேட்டான்.
“தாராளமா போயிட்டு வாங்க. எங்களை பத்தி கவலையே படாதீங்க! நாங்க மூணுப் பேரும் இன்னும் புடவைக் கடை எபக்ட்ல இருந்தே வெளியே வரலை” – சந்தோஷமாக பதில் கொடுத்தாள் அப்சரா.
பாரதியும், மேனகாவும் கூட சிரித்தார்கள்.
“உங்க மீட்டிங் முடிஞ்சதும் ஒரு போன் போடுங்க, நாங்களே காருக்கு வரோம். அது வரைக்கும் சும்மா சின்ன ஐடம்ஸ் ஷாப் செய்றோம்” – அப்சராவே சொல்லி முடித்தாள்.
சரியென்ற அர்த்தத்தில் தலை ஆட்டினாலும் சிவக்குமார் கண்கள் மேனகா மேலே வந்து நின்றது.
“நீங்க மெதுவா வேலையை முடிச்சுட்டு வாங்க. நான் அப்சரா, பாரதி கூட இருக்கேன்” – மேனகா அவளாகவே அவனுக்கு பதில் சொன்னாள்.
பளிச்சென்று மலர்ந்த முகத்துடன் மூவருக்கும் கை அசைத்து விடை பெற்றான் சிவா.
“கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு நிறைய வேலை இருக்கு மேனகா. இப்போ இருக்க நிலைக்கு, சிவா கல்யாணத்துக்கு அப்புறம் என்னை, மாமாவை எல்லாம் வீட்டுக்குள்ளே விடுவாரான்னே தெரியலை” – அப்சரா கிண்டலாக சொல்லவும், மேனகா சிரித்தாள்.
Siva konjam introvert pole adhukke ivanga etho periya kurai mathiri adha highlight panurangale
Interesting update ma'am 👏👏👏👏👏👏👏 jewells shopping irukka illa adhukku munadiya idi vizhuma?? Parka waiting!!
Thank you.
Menakha mathiruvanga nu nenaikiren..
Siva mariruvarah?..
Waiting for next episode...