(Reading time: 10 - 19 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“முரளிக் கண்ணா இதை விட ஜில்லுன்னு ஒரு சமாச்சாரம் சொல்றேன் என் கூடக் கிளம்பி வா” என்றான் தனசேகர்.

“அதென்னடா...அப்படியொரு ஜில்லு மேட்டர்?” தலையைச் சாய்த்துக் கொண்டு முரளி கேட்க,

“அது...சஸ்பென்ஸ்!...உடனே சொல்லக் கூடாது...” என்றபடி கண்ணடித்தான் தனசேகர்.

குடித்து முடித்த டம்ளரை தனசேகரிடமிருந்து தானே வாங்கி கடைக்காரரிடம் முரளி கொடுக்க,  தனசேகர் தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தான். 

“அடேய் சேகரா...இன்னிக்கு ஒருநாளாவது நான் பணம் குடுக்கறேண்டா” என்றபடி முரளி பனத்தை எடுக்க,

“அந்த வேலையே ஆகாது...இன்னிக்கு நான் செம சந்தோஷத்துல இருக்கேன்...அதனால...நான்தான் குடுப்பேன்” என்றபடி தானே பணத்தைக் கொடுத்தான் தனசேகர்.

இருவரும் அங்கிருந்து கிளம்பி பைக்கில் செல்லும் போது, “டேய்..சேகர்...அது என்ன விஷயம்?ன்னு சொல்லுடா...எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்குடா” பரபரத்தான் முரளி. 

“சும்மா பறக்காதடா...இன்னும் கொஞ்சம் தூரம்தான்...அங்க போய்த் தெரிஞ்சுக்க” என்றான் தனசேகர்.

அந்த பைக் தனசேகருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் நுழைந்தது.  பைக்கை தோப்பிற்கு மத்தியிலிருந்த அந்த ஓட்டு வீட்டின் முன் கொண்டு போய் நிறுத்தினான் தனசேகர்.

பைக்கிலிருந்து நிதானமாய் இறங்கிய முரளி, “இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்திருக்கே?” கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், சற்றுத் தள்ளியிருந்த கயிற்றுக் கட்டிலில் சென்றமர்ந்த தனசேகர், “வாடா...வந்து என் பக்கத்துல உட்காரு” என்றான்.

முரளி மௌனமாகச் சென்று, கயிற்றுக் கட்டிலில் அவனருகே உட்கார்ந்தான்.  “ம்...உட்கார்ந்திட்டேன்!..இப்பச் சொல்லு”

சொல்ல ஆரம்பித்த தனசேகர், சொல்லும் முன் மெலிதாய்ச் சிரித்தான்.  அந்தச் சிரிப்பில் இதுவரை அவன் முகத்தை எட்டிப் பார்க்காத வெட்கம் என்னும் உணர்ச்சி தெரிந்தது.

“டேய்...முரளி...அய்யாவுக்கு அடுத்த மாசம்...பத்தாம் தேதி கல்யாணம்!....நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சுது”

கண்களை பெரிதாய் விரித்துக் கொண்டு அவனைப் பார்த்த முரளி,

2 comments

  • Good morning dear Mukil Dinakaran!<br />நட்புக்கொரு காவியம் படைக்கவிருக்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! கதை ஜில்லுனு போகுது, மனசை சிக்குனு பிடிக்குது! கடைசி வார்த்தை படிச்சதும் பக்குடுனு ஆயிடுச்சி! பெரிய விருந்துக்கு தயாராயிட்டேன்...நன்றி!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.