(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

“ஆஃப்ஷோர் கால் டைம் ஆச்சு போலருக்கு மஞ்சு... நான் பார்க்கிறேன்... நாளைக்கு தான் இன்டர்நெட் கனக்ஷன் கொடுக்க வரேன்னு சொல்லி இருக்காங்க... நீ ரெஸ்ட் எடுக்குறேனா எடு... நான் பேசி முடிச்சுட்டு, ஹோட்டல்ல ஆர்டர் செய்து வாங்கிட்டு உன்னை எழுப்புறேன்...” என்ற படி மீண்டும் ஒரு தடவை அழுத்தமாக அவளின் நெற்றியில் முத்தமிட்டான் மனோஜ்.

மஞ்சு அவனை விட்டு மெல்ல விலகி வந்தாள்... மனோஜ் போனை எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்றான்...

தனியாக விடப்பட மஞ்சு தன்னை சுற்றிப் பார்த்தாள்...!

அவர்கள் இந்தியாவில் இருந்து எடுத்து வந்திருந்த பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது...!

மனோஜும், மஞ்சுவும் அப்பார்ட்மென்ட் வந்த சேர்ந்த உடன், அங்கே அருகில் இருந்த மனோஜின் நண்பர்கள், அவர்களின் குடும்பத்தினர்  என பலரும் நேராகவே வந்து இவர்கள் இருவரையும் வரவேற்று, சில நிமிடங்கள் பேசி விட்டு சென்றிருந்தார்கள்... அப்போது மனோஜ் கேட்டுக் கொண்டதற்காக வாங்கி வைத்திருந்த அத்தியாவசிய பொருட்களையும் தந்து விட்டு சென்றார்கள்... அவை அனைத்தும் பல கவர்களில் அந்த லிவிங் ரூமிலேயே குவிந்திருந்தது!

ஒரு வினாடி மஞ்சுவிற்கு மலைப்பாக இருந்தது!!!

அவள் செய்து முடிக்க வேண்டிய வேலை, எதிர் கொள்ளவிருக்கும் எதிர்காலத்தையும் சொல்லாமல் சொல்வதாக மஞ்சுவிற்கு தோன்றியது!!!!  

தொடரும்...

Next episode will be published on 13th May. This series is updated weekly on Thursdays.

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.