(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

விட்டு வேலையை தொடர்ந்தான்!

மஞ்சு அதைக் கவனித்தாள்! அதனால் பேச்சை தொடர்ந்தாள்.

“வினோவும் ஹெல்தி தான். அவினாஷ் பிறந்தப்போ இரண்டே முக்கால் கிலோ தான் இருந்தான்??”

“அண்ணிக்கு நார்மல் டெலிவரி pbs! பொதுவா எனக்கு தெரிஞ்சு ஹெல்தி பேபீஸ் மூணு கிலோ பக்கத்துல தான் இருப்பாங்க!”

“நல்ல வேளை அமுதாக்கு சிசேரியன், தப்பிச்சா!”

“அமுதா கிட்ட பேசினீயா?”

“பேசிட்டேன் மனோஜ்! சரா குழந்தை பத்தி ஈமெயில் அனுப்பின உடனேயே அவர் கிட்ட பேசினேன். அமுதா பேசுற நிலைமைக்கு வந்த உடனே எனக்கு கால் செய்ய சொன்னேன். அவளே பேசினா. எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு மனோஜ்!”

“அமுதாக்கு கிஃப்ட் ஏதாவது அனுப்பலாமா?”

“நான் ஆல்ரெடி அனுப்பிட்டேன். பேபி கிஃப்ட் ஹாம்பர் ஒன்னு இன்டர்நெட்ல இருந்தது, அதை அவ அட்ரஸ்க்கு அனுப்பிட்டேன். சாரி, உங்க கிட்ட கேட்கலாம்னு பார்த்தேன். நீங்க ஆபிஸ்ல பிஸியா இருப்பீங்க. அதும் இல்லாம அம்மு என் ஃபிரென்ட் அதான் நானே அனுப்பிட்டேன்.”

“நீயாவே செய்தா எனக்கு சந்தோஷம் தான் pbs! குழந்தைக்கு பேர் செலக்ட் செய்தாச்சாமா?”

“இல்லையாம்! சரா அம்மா எப்போவும் போல வேற ட்ராக்ல இருக்காங்க! ஆனாலும் சரா அதெல்லாம் பார்த்துப்பார். குழந்தையை பக்கத்துல இருந்து பார்க்க முடியலைன்னு எனக்கு வருத்தமா இருக்கு மனோஜ். இவ்வளவு நாள்ல எனக்கும் சரி, அமுதாக்கும் சரி எந்த ஒரு நல்லது நடந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் நாங்க பக்கத்திலேயே இருப்போம். இப்போ முதல் தடவையா அவக் கூட நான் இல்லை.”

“சரவணன் நாலு மாசத்துல யூ.எஸ் வந்திருவோம்னு சொன்னாருன்னு சொன்னீயே. அவங்க வந்த உடனே நாம விசிட் செய்வோம்.”

“ம்ம்ம்...” என்ற மஞ்சுவின் மனம் நாள் கணக்கை போட்டது! அவளும் அமுதாவும் பேசியப் போதும், இங்கே சந்திப்பதை பற்றி பேசினார்கள்!

அப்போது அமுதா, மஞ்சு எப்போது திரும்பி வரப் போகிறாள் என்ற ஒரு கேள்வியை கேட்டப் போது தான் ஒரு வருட லீவில் ஆறு மாதங்கள் ஓடிப் போய் விட்டது என்பதே மஞ்சுவிற்கு உரைத்தது!

இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது! அதற்குப் பின்????

னோஜ் அன்றைய வேலைகள், ஈமெயில்கள், போன் கால்கள் என அனைத்தையும் முடித்து விட்டு வந்தப் போதும், மஞ்சு அவர்களின் பர்சனல் லேப்டாப்பில் அமுதாவின் குழந்தையை

4 comments

  • Arambichitangaya!! :D correct ah vitta idhathula irundhey arambikurangale :Q: nice update ma'am 👏👏👏👏👏 eppadi yo yaro oruthar aduthavangalai compromise paniduvanga so tension illamal adutha varam ena agumnu padika waiting. <br /><br />Thank you.<br /><br />I

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.