(Reading time: 5 - 10 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 03 - பிந்து வினோத்

ஞ்சு மனோஜை பார்த்து முறைத்துக் கொண்டு இருக்க, மனோஜ் திடிரென்று கோபத்தை கை விட்டு புன்னகைத்தான்.

“ஓகே pbs நீ சொல்ற டீல் எனக்கு ஓகே. ஒன்னே ஒன்னு செய். உங்க அம்மா, அப்பாக்கு...  அப்புறம் எங்க அம்மாக்கு ஒருத் தடவை போன் போட்டு நம்ம டீலை எக்ஸ்ப்லேயின் செய்திரு போதும்! எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது!”

அமைதியாக புன்னகை மின்ன மனோஜ் சொன்ன பதில் கேட்டு மஞ்சு விழித்தாள்.

மனோஜ் அவள் அருகே நெருங்கி அமர்ந்து கன்னங்களை காதலுடன் கிள்ளினான்.

“என் pbs வெரி க்யூட். அதும் இப்படி கோபத்தோடு பே பே ன்னு முழிக்கும் போது சூப்பர் அழகு...”

“மனோஜ்...” கோபத்துடன் அழைக்க முயன்றும் மஞ்சுவின் அழைப்பு கெஞ்சலாக தான் ஒலித்தது.

மனோஜ் அவளை தன் மார்புடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

“மஞ்சு, எது மேல எல்லாம் எமோஷனல் அட்டாச்மென்ட் வைக்கனும்னு நாம யோசிச்சு வைக்கனும். இந்த வேலை மேல இவ்வளவு அட்டாச்மென்ட் வேணுமா? அந்த வேலையே எதுக்கு? நம்ம குடும்பத்துக்கு தேவையான அளவு சம்பாதிக்க...! அப்புறம், அந்த வேலைக்கு ஏற்ப நாம நம்ம வாழ்க்கையை மாத்திக்கனுமா?”

“...”

“நீ உன் கோபத்தை மறைக்காம கொட்டிட்ட. எனக்கு அது பிடிச்சிருக்கு. உனக்கு வேலையை விட பிடிக்கலைனா வேண்டாம். என் மஞ்சுக்கு பிடிச்ச மனோஜா இருக்க தான் எனக்கு எப்போவும் ஆசை.”

“...”

“என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்குற?” என்ற மனோஜ் மனைவியை விட்டு தள்ளி அமர்ந்து, மீண்டும் அவளின் கன்னங்களை செல்லமாக கிள்ளினான்.

“எப்படி கோபக்கார மனோஜ் இப்படி மாறினாருன்னு புரியாம குழம்பி போயிருக்கேன்...” என்ற மஞ்சுவிடமும் இப்போது கோபம் போன இடம் தெரியவில்லை...

“எல்லாம் உன் கிட்ட இருந்து கத்துக் கிட்டது தான்... இந்த சூப்பர் ஸ்டார் மஞ்சுவுக்கு ஈக்வலா இல்லைனாலும் ஓரளவுக்கு கம்பேர் பண்ற அளவுக்கு இருக்க வேண்டாமா??”

மஞ்சு மனோஜின் கழுத்தை சுற்றி கையைப் போட்டு அணைத்துக் கொண்டாள்...

“பேச்செல்லாம் சரி... நல்லா தான் பேசுறீங்க....!!! வெளிநாட்டுல... நாம மட்டும் தனியா வேற இருக்கோம்... ஹ்ம்ம்....”

4 comments

  • Manager sir already sketch pottu ippo execute panuraro :Q: :Q: <br />Nalla understanding and flexibility irundha ippadi easy adjust seithu Kittu pineapple gravy sapidalam pole 😁😜 😍😍😍 cute update bindu ma'am 👏👏👏👏👏👏👏👏 Mr M semma 👌 and avarukku ertha jodi mrs m :hatsoff: <br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.