(Reading time: 8 - 16 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 05 - பிந்து வினோத்

ஹாய், இது மனோஜோட நம்பர் தானே?” என்று மறுமுனையில் ஆங்கிலத்தில் கேள்விக் கேட்டது ஒரு பெண் குரல்.

குரலும், பேச்சில் இருந்த மேற்கத்திய பாணியும், பேசுவது இந்திய பெண் இல்லை என்பதை மஞ்சுவிற்கு உடனே எடுத்துச் சொன்னது.

யார், எதற்கு கேட்கிறார்கள் என்றுப் புரியாமல்,

“எஸ்,” என்று ஆங்கிலத்திலேயே பதிலளித்தாள் மஞ்சு.

“நைன் ‘ஒ கிளாக் மனோஜ் அட்டன்ட் செய்ற மீட்டிங் இருக்கு. அவர் இன்னும் ஆபீஸ் வரலை. இந்த நம்பர் தான் என் காண்டாக்ட் லிஸ்ட்ல இருக்கு,” என்று பொறுமையாக விளக்கினாள் எதிர்முனை பெண்மணி.

பேசுவது மனோஜின் கிளையன்ட் மேனேஜர் ஷானன் என்று மஞ்சுவிற்குத் தோன்றியது. மனோஜ் பலத் தடவை ஷானன் பற்றி மஞ்சுவிடம் சொல்லி இருக்கிறான்.

ஆனால் அதை எல்லாம் விட மனோஜ் ஏன் இன்னும் அலுவலகம் சென்று சேரவில்லை என்ற கேள்வி எழுந்து மஞ்சுவின் மனதை குழப்பியது.

அவளின் விழிகள் மேஜை மேலே இருந்த சின்ன கடிகாரத்திடம் சென்றது. ஒன்பது மணி தாண்டி சில நிமிடங்கள் ஆகி இருந்தது. மனோஜ் கிளம்பிய நேரத்திற்கு இந்நேரம் அலுவலகம் சென்றிருக்க வேண்டுமே?

“மனோஜ் கிளம்பி ஒரு மணி நேரம் மேல ஆச்சு. இந்நேரம் வந்திருக்கனுமே. ஏன் வரலை?” எத்தனை முயன்றும் மஞ்சுவால் பதற்றத்தை மறைக்க முடியவில்லை.

“ஒருவேளை வழில அவருக்கு லேட் ஆகி இருக்கலாம், நான் பார்க்கிறேன்,” என்று சொல்லி உரையாடலை முடித்த ஷானன், மஞ்சுவின் பதற்றத்தை உணர்ந்துக் கொண்டோ என்னவோ,

“மார்னிங் டைம்ஸ்ல இந்த ரூட்ல எதிர்பார்க்காம ட்ராஃபிக் ப்ராப்ளம்ஸ் வரது, எப்போவும் நடக்குறது தான்,“ என்றும் சேர்த்துச் சொன்னாள்.

அதை எல்லாம் உணர்ந்து கவனிக்கும் மனநிலையில் மஞ்சு இல்லை. எனவே பேச்சை முடிக்காமல்,

“அப்படி டிலே எதிர்பார்த்து தான் சீக்கிரம் கிளம்புவார். இவ்வளவு லேட் ஆனதே இல்லையே!” என்றாள் கவலையுடன்.

“நீங்க கவலைப் படாம இருங்க. மனோஜ் வந்த உடனே நான் உங்க கிட்ட பேச சொல்றேன். பை,”

“பை” என்றாள் மஞ்சு தனக்குள் ஆழ்ந்தப் படியே...!

ஷானன் அழைப்பை துண்டித்து இருப்பது புரியவே அவளுக்கு சில பல வினாடிகள் தேவைப்

6 comments

  • :lol: :D cool update bindu ma'am 👏👏👏👏👏👏 nirmal love kaga poi sonna okay than musudu manager panadhadha 😁😁 but ippo manju has to get back to India :sad: avangalukkum oru onsite opportunity kudungale 😍😍😍😍<br /><br />Thank you.
  • Nan kuda Manju mathiri juicy reason expect seidhene :p Kadaisila Goods trainu sollitta Binds :D<br />I thought second part is all abt M&M's life in US. Illaiya?
  • Bindu mam ennakku unga kadaigal romba podikum. Unga heroine memaiya aana stronga iruppanga. Idhuvaraikum manju appidi illaye. Enn???

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.