(Reading time: 9 - 18 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 07 - பிந்து வினோத்

யாரென்று பார்க்க மனோஜ் முதலில் சென்றான். யாராக இருக்கும் என்ற கேள்வி மஞ்சுவிற்கும் இருந்ததால், ஆர்வக் கோளாறில் அவளும் எட்டிப் பார்த்தாள். பேச்சு சத்தம் கேட்டது.

யாரென்று பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

அங்கே நிர்மல் மனோஜுடன் பேசிக் கொண்டிருந்தான்!

கைகளை அசைத்து, அசைத்து நிர்மல் பேசுவதை பார்த்து வந்த சிரிப்பை விட மனோஜின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம் + கோபம் + எரிச்சல் தான் மஞ்சுவிற்கு அதிக சிரிப்பை வரவழைத்தது!

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர்கள் அருகே சென்றாள்!

“ஹேய் மஞ்சு! உனக்காக தான் வந்தேன். ஹர்ஷினி சொன்னா, நீ இரண்டு நாள்ல இந்தியா கிளம்புறேன்னு. அவளுக்கு அமுதா சொல்லி இருப்பா போலருக்கு. நீ கிளம்புறது தெரிஞ்சப்புறம் எப்படி வந்து ஹெல்ப் செய்யாம இருக்குறது? அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்,” என்ற நிர்மல், மஞ்சுவின் பார்வை மனோஜின் பக்கம் போவதை புரிந்துக் கொண்டு அவனும் மனோஜைப் பார்த்துப் பேசினான்.

“உங்களுக்காக தான் மனோஜ் இவ்வளவு நாளா நான் இந்தப் பக்கமே வரவே இல்லை. நான் ப்ராமிஸ் கொடுத்தா அதை அப்படியே கீப் அப் செய்வேன் தெரியுமா?”

இன்னைக்கு, இந்த் நேரத்துல நீ வரலைன்னு யார் அழுதது!’ என மனோஜ் வாய்க்குள்ளே முனுமுனுப்பது மஞ்சுவிற்கு கேட்கவில்லை ஆனால் புரிந்தது!!!

“உள்ளே வா நிர்மல். சாப்பிட்டியா?” என்று நண்பனிடம் விசாரித்தாள் மஞ்சு.

அதற்காகவே காத்திருந்தவனாக வீட்டினுள் வந்து அமர்ந்த நிர்மல், அங்கிருந்த பெட்டிகளை பார்த்து வாய் பிளந்தான்.

“என்ன மஞ்சு அதுக்குள்ளே பேக்கிங் முடிச்சாச்சா??? மன்டே தானே நீ கிளம்புறேன்னு ஹர்ஷினி சொன்னா?”

“நான் எல்லாம் ப்ளான் செய்து எதையும் செய்றவ நிர்மல். 99% பேக்கிங் முடிச்சாச்சு. வெயிட் கூட பார்த்தாச்சு. லாஸ்ட் மினிட் திங்க்ஸ்க்காக பெட்டியை திறந்து வச்சிருக்கேன்!”

“ஹையோ தெரிஞ்சிருந்தா முன்னாடியே வந்திருப்பேனே மஞ்சு. ரொம்ப கஷ்டப் பட்டு யூ.எஸ்ல படிக்க வந்திருக்கேன். க்ளாசஸ் மிஸ் செய்ய மனசு வரலை. நாளைக்கு அசைன்மென்ட் தான் கொடுக்கனும் அதான் இன்னைக்கு வந்தேன்.”

“பரவாயில்லை நிர்மல், அப்படியே மஞ்சுவுக்கு ஹெல்ப் தேவைப் பட்டாலும் உதவ நான் இருக்கேன். நீ போய் உன் அசைன்மென்ட்ஸ் செய்ற வழியைப் பாரு,” என்று நிர்மலை அங்கே

4 comments

  • Hahhahah nirmal oda entry :cool: nalla pazhi vanginaru 😁😁😁😁lovely update bindu ma'am 👏👏 👏👏👏👏👏👏 naa second half ellam us la than ninaichen....back to India 😯😯Mr & Mrs M sikrama serthu vachi kacheri arambinga ji😍😍 good luck.<br />Thank you.
  • Very very nice update bindu sister ☺☺☺☺☺☺☺ waiting for your next episode💐💐💐 good luck🍀🍀🍀

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.