This is a Chillzee KiMo Special episode. To read the complete novel, please visit Chillzee KiMo.
"மாமா." என்று அவள் வாய் முணுமுணுத்தது.
"ஆமாம். நான் உன் மாமாதான். இப்பத்தான் நான் உன் மாமான்னு தெரிஞ்சுதா?" கரகரத்த குரலில் கேட்டான் தமிழ்வேந்தன்.
தன்னுடைய தந்தை இறந்தபோது இதே தோற்றத்தில்தான் இருந்தார் சந்திரமோகன். இப்போது தமிழ்வேந்தனைக் கண்டதும் அவளுக்கு அவருடைய நினைவுதான் வந்தது.
இத்தனை நாட்கள் அழாமல் இருந்ததை எல்லாம் அழுதுதீர்த்தாள். அவன் ஆறுதலுடன் அவளை அணைத்துக் கொண்டான்.
"முட்டாள். என்னை விட்டுப்போக முடிவெடுத்தாயா? இந்த மாமாவை விட்டு உன்னால் போக முடியுமா? உன் மேல் உயிரையே வச்சிருக்கேன்டி. எப்ப உன் போட்டோவைப் பார்த்தேனோ அப்பவே உன்னை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். நீ அப்பாவுக்காகத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதும் எப்படி அடிபட்டுப்போனேன். தெரியுமா? அந்தக் கோபத்தில் இருந்தவனை எப்பப்பாரு போ போ என்றாய். அதுதான் போயிட்டேன். எப்ப நீஅழைப்பேன்னு காத்துக்கிட்டிருந்தேன். ஆலம் சுத்தி வரவேற்க வேண்டிய உன்னை வாந்தி எடுத்து வரவேற்றேன். அப்பவே நீ என்னை நெருங்கிட்டேன்னு எனக்குத்தெரியும். அன்னிக்கு உன் மடியில் படுத்தப்பதான் நீண்ட வருடம் கழிச்சு நிம்மதியா தூங்கினேன். அந்த சுடிதார் கூட நான் அன்னிக்கு இரண்டு பொண்ணுங்ககிட்ட சொல்லி உனக்காக வாங்கியதுதான் "
அவளுக்கு அன்று கடையில் நடந்தது நினைவுக்கு வந்தது. தானும் அவனை விரும்புவதாகக் கூறினாள். அவனைக் காண்பதற்கு முன்பே சந்திரமோகன் பேச்சைக் கேட்டே அவனை நேசித்தாகக் கூறினாள்.
"அப்பா நம்ம மூனு பேரு பத்தியும் தெரிஞ்சுதான் நம்மை சேர்த்து வச்சிருக்காங்க."
அவளுக்கும் அதுதான் உண்மை என புரிந்தது.
"சரி. இதை அவகிட்ட குடிக்க குடுப்பா. ரொம்பக் களைச்சுப் போயிட்டா. உன் அப்பா தனக்கு