(Reading time: 9 - 18 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 13 - பிந்து வினோத்

ஹேய் மஞ்சு! வெல்கம் பேக்!” என்ற துர்காவின் குரல் மஞ்சுவிற்கு பெரிய அளவில் ஆறுதல் உணர்வைக் கொடுத்தது.

ஹெச்.ஆர்’ஐ சந்தித்து விட்டு, ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் தன்னுடைய பழைய க்யூபிற்கு வந்தவள், அங்கே இருந்த பல புதுமுகங்களை பார்த்து அதிசயித்தாள்!

நிர்மலும் இல்லை, அமுதாவும் இல்லை என்பதால் கொஞ்சம் அந்நிய உணர்வு ஏற்பட்டது...

துர்கா மீட்டிங்கிற்கு சென்றிருந்தால் காலியாக இருந்த ஒரு இடத்தில் அமர்ந்திருந்தாள்.

ஒரு வழியாக துர்கா வந்து விடவும் மஞ்சுவிற்கு நிம்மதி ஏற்பட்டது.

“ஹாய் துர்கா...” என்றாள்.

“என்ன மஞ்சு, சாக்லேட் எல்லாம் கிடையாதா???”

“நாளைக்கு எடுத்துட்டு வரேன் துர்கா... டீம்ல இப்போ எவ்வளவு பேர் இருக்காங்கன்னு ஐடியா இல்லை...”

“ரைட், ரைட்... வா உன்னை நியூ டீம் மெம்பர்ஸ்க்கு இன்ட்ரோ செய்து வைக்கிறேன்...”

“ஓகே... பட் நான் எக்ஸிட் ஃபார்மாலிட்டீஸ்க்காக தான் வந்திருக்கேன் துர்கா... என்னை மீட் செய்றதுல அவங்களுக்கு என்ன யூஸ்?” என்றாள் மஞ்சு சின்ன ஸ்மைலுடன்.

“நானும் உன் கிட்ட அதைப் பத்தி பேசனும். டூ ஹவர்ஸ் கன்டினியூவஸ் மீட்டிங்ல இருந்தேன்... வா, கேம்பஸ் சுத்தி நடந்துட்டே பேசலாம்...”

மஞ்சு சம்மதிக்க, இருவரும் ஒன்றாக நடந்தார்கள்.

முதலில் மனோஜ் பற்றி, அமெரிக்காவில் அவர்கள் வாழ்ந்த இடம் பற்றி, அங்கே நிர்மலை சந்தித்துப் பற்றி, அமுதாவின் குழந்தைப் பற்றி, என பொதுப்படையாக பேசினார்கள்...

பின்,

“அப்போ டிசைடே பண்ணிட்டியா மஞ்சு? ரிசைன் பண்றது தான் ஃபைனல் டெசிஷனா?” எனக் கேட்டு மஞ்சுவை ஆச்சர்யப்படுத்தினாள் துர்கா.

“எஸ் துர்கா. அது தான் இப்போதைக்கு சரியா இருக்கும்னு தோணுது. அவர் ஒரு இடத்துல, நான் ஒரு இடத்துலன்னு இருந்தா எப்படியோ இருக்கு...”

“அது ஓகே மஞ்சு. ஒரேடியா ரிசைன்னு எதுக்கு யோசிக்கனும்? வேற ஆப்ஷன்ஸ் பார்க்கலாமே?”

“நான் அப்படி தான் யோசிச்சேன் துர்கா. இன் ஃபாக்ட் ரிசைன் செய்யனும்னு நான் முதல்ல யோசிக்கவே இல்லை. காலேஜ் முடிச்ச உடனே வேலை கிடைச்சுடுச்சு... அதனால அதுக்கு அப்புறம் ஃபினான்ஷியலா யாரையும் நான் டிபென்ட் செய்து இருந்தது இல்லை... திடீர்னு வேலையை விடனும்னு யோசிச்சப்போவே எப்படியோ தான் இருந்தது...”

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.