This is a Chillzee KiMo Special episode. To read the complete novel, please visit Chillzee KiMo.
அன்றைய தினம் சந்திரமோகன் திரும்பி வந்தபோது அவள் மிகவும் அமைதியாக இருந்தாள்.
"வேதா."
"மாமா. என்னை மன்னிச்சிடுங்க மாமா."
அவர் அப்படியே திகைத்துத் திரும்பிப் பார்த்தார்.
"வேதா. என்ன சொன்னே?"
"என்னை மன்னிச்சிடச் சொன்னேன்."
"நான் அதைக் கேட்கலை. என்னை எப்படி கூப்பிட்டே?"
அப்போதுதான் அவளுக்கு உரைத்தது. தன்னையறியாமலே அவரை மாமா என்றிருந்தாள். கிருஷ்ணவேணி அவரை அழைப்பதைக் கேட்டுக்கொண்டேயிருந்ததாலோ என்னவோ அவளுக்கும் இயல்பாக வந்திருந்தது.
"மாமா." என்றவளை அப்படியே அணைத்துக்கொண்டார்.
"இப்பத்தான் என்னை இப்படி அழைக்கத் தோணுச்சா வேதா?" அவள் நெற்றியில் முத்தமிட்டார்.
அவள் பிரமித்துப்போனாள்.
கிருஷ்ணவேணி தன்னிடம் சொன்னதை எல்லாம் அவரிடம் கூறினாள்.
"ஆமாம் வேதா. அந்த நேரத்தில் நான் பைத்தியம் பிடிச்சதுமாதிரிதான் அலைஞ்சேன். அப்பதான் ஒருநாள் நீலவேணி அம்மாளைப் பார்க்கப் போகும்போது கிருஷ்ணவேணியைப் பார்த்தேன். அப்பத்தான் எனக்கு ஞானோதயம் பிறந்தது. தன்னுடைய நிலைமை அறியாமல் அந்தக்குழந்தை சிரித்தபோது அவளை விடவா எனக்குத் துன்பம் வந்துவிட்டது என்று எனக்கு