ஹோட்டல் அறைக்கு திரும்பிய சதீஷ் சுதந்திர உணர்வுடன் பெருமூச்சு விட்டான்!!!
அவன் ஹைதராபாத்திற்கு வந்த வேலை இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை!
கட்டாயம் நான்கைந்து நாட்கள் ஆகும் என்ற நம்பிக்கையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் சிங்கப்பூர் திரும்பி செல்ல விமான டிக்கெட் புக் செய்திருந்தான்...
ஆனால் அவன் வந்த வேலை ஒரே நாளில் முடிந்து விட்டது!!!
அவன் முடிக்க வந்த பிஸ்னஸ் டீல், உடனே நடந்தேறி விட்டது!
தன் வெற்றியை நினைத்து சதீஷிற்கே பெருமையாக இருந்தது...
சரியாக அதே நேரத்தில் அவனின் போனில் பூஜாவிடம் இருந்து வாட்ஸ்ஆப் அழைப்பு வந்தது.
“ஹாய் சிஸ்! எப்படி இருக்க?” என்று அழைப்பை ஏற்றுக் கொண்டே கேட்டான் சதீஷ்!
“இந்தக் கேள்வியை நீ என் கிட்ட கேட்டு ஆறு மணி நேரம் தான் ஆச்சு... திரும்ப கேட்டா அதுக்குள்ளே என்ன மாறி இருக்கும்னு நினைக்குற?”
“ஓகே சிஸ்! சில்லாக்ஸ்! நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு... இவ்வளவு சீக்கிரம் அக்ரீமென்ட்ல சைன் போடுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... பிக் சக்சஸ் ஃபார் அஸ், பூஜா!”
“இல்லைண்ணா பிக் சக்சஸ் ஃபார் யூ...”
“நான் ஜெயிச்சா அது நீ ஜெயிச்ச மாதிரி தான்... நான் என் ரிட்டர்ன் டிக்கெட்டை மாத்தி கேட்டுப் பார்க்கிறேன்... நாளைக்கே வந்திருவேன்னு தோணுது... உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரனுமா??”
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Thank you.
Sk nandu
Sooper