Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Sollamal thottu sellum thendral
Pin It

தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 06 - பிந்து வினோத்

சொன்னப் பேச்சு எதையும் கேட்க மாட்டேங்குற, நந்தினி. இதெல்லாம் நீ செய்ற வேலை கிடையாது. முதல்ல கயிறுல இருந்து கையை எடு. நான் புஷ்பா கிட்ட பேசிட்டேன். அவ பக்கத்து ஊருல இருந்து வேலை செய்ய ஒருத்தனை அழைச்சுட்டு வரேன்னு சொல்லி இருக்கா...”

  

சீதா பாட்டியின் பேச்சு காதில் விழுந்தாலும் கண்டுக்கொள்ளாமல் தென்னை மரத்தை இழுக்க முயற்சி செய்தாள் நந்தினி! அது அவளின் உடல் வலுவை தாண்டிய வேலையாக இருந்ததால், அவளின் உள்ளங்கைகள் அழுத்தம் தாங்காமல் சிவந்தன!

  

“நந்தினி!”

  

“பாட்டி, சும்மா கத்தி என் காதை டிஸ்டர்ப் செய்யாதீங்க!”

  

“நந்தினி, இப்போ நீ வரப் போறீயா, இல்லையா???”

  

சீதா தன் வயதிற்கு ஏற்றுக் கொள்ளாத விதத்தில் சத்தமாக கத்த, நந்தினி இளைய தலைமுறைக்கே உரிய விதத்தில் அதைப் பற்றி கவலைப் படாமல் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தாள்.

  

“நந்தினி!!!!” சீதா மீண்டும் உரக்க அழைக்க,

  

“பாட்டி எதுக்கு இப்படி ஒரு சத்தம்? கீழே யாரையும் காணோம்னு தேடுனா, இங்கே இருக்கீங்க???” என்றுக் கேட்டுக் கொண்டே அங்கே புஷ்பா வந்தாள்.

  

“இங்கே பாரு, டாக்டர் செய்ற வேலையா இது??? சொன்னா கேட்க மாட்டேங்குறா!!!” சீதா நந்தினி இருந்த திசையில் சுட்டிக் காட்ட, புஷ்பா நந்தினி அருகே ஓடிச் சென்று அவள் கையில் இருந்த கயிறை பற்றினாள்.

  

“என்ன டாக்டர் வேலை இது? அது இதுன்னு வேலை செய்ற என்னாலேயே இதெல்லாம் செய்ய முடியாது. உங்களால முடியுமா??”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 06 - பிந்து வினோத்Thenmozhi 2021-11-08 19:58
uyaramana hero is back :P
SK Nands pakam look vidama vera yarai look viduvar ;-)
Nnads enna suvar mela yeri super heroine velai ellam seiranga :-)
inge vanthirukathu sk-nu en guess, apo epadi vanthar??
luking forward to read sk nands scenes :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 06 - பிந்து வினோத்AdharvJo 2021-11-02 12:23
Nice update bindu ma'am 👏👏👏👏 who is this nettai?? SK vaga irukka chance iruko?? :Q: waiting to read the next update
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 06 - பிந்து வினோத்madhumathi9 2021-11-02 10:53
:grin: nice & cute epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top