“பூபாலன்!”
அந்த சின்ன வீட்டின் வேலியோரம் நின்று நந்தினி சத்தமாக குரல் கொடுத்தாள்.
அடுத்த வினாடியே பூபாலனின் உருவம் வாசலில் தெரிந்தது.
“டாக்டர்?”
பூபாலனின் குரல் கேட்டதும் நடந்து வாசலின் அருகே வந்தாள் நந்தினி.
“பாட்டி சப்பாத்தி செஞ்சாங்க. நீங்க சாப்பிட்டீங்களான்னு தெரியலைன்னு கொடுக்க சொன்னாங்க...” என்றவள், கையில் இருந்த பாத்திரத்தை பூபாலனிடம் கொடுத்தாள்...
“எப்போவும் போல வீட்டுல இருந்து குரல் கொடுத்திருந்தா நானே வந்து வாங்கி இருப்பேனே டாக்டர்...”
“பரவாயில்லை...” என்று பூபாலனிடம் பேசினாலும் நந்தினியின் பார்வை அவனைத் தாண்டி சென்று... தேடியது...
ஆனால் அந்த புதியவனை எங்கும் காணோம்...!!!
இருட்டில் காற்றாட அமர்ந்திருந்த எஸ்.கே, நந்தினி வந்ததுமே எழுந்து வந்திருந்தான்...
ஆனால் அவன் அவளின் பின்னால் ஒதுங்கி நின்றிருந்ததால் நந்தினியின் கண்களில் படவில்லை...
தள்ளி நின்றிருந்தாலும் எஸ்.கே’வின் கண்கள் முழுக்க முழுக்க நந்தினியிடம் தான் இருந்தது... அவளை விட்டு வேறு எங்கும் கண்களை திருப்ப அவனுக்கு மனம் வரவில்லை...
“சரி பூபாலன் நான் கிளம்புறேன்...” என சொல்லிக் கொண்டே திரும்பிய நந்தினி, இருட்டில்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
SK Nnads romance thani than
Thank you