Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Sollamal thottu sellum thendral
Pin It

தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 10 - பிந்து வினோத்

தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்த நந்தினி இருளில் ஒளிரும் எல்.ஈ.டி கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். மணி நள்ளிரவு ஒன்றாகி இருந்தது.

  

எஸ்.கே!

  

அவன் தான் அவளின் மொத்த எண்ணத்தையும் ஆக்கிரமித்திருந்தான்.

  

இரண்டே இரண்டு முறை சந்தித்த ஒருவனை பற்றி... அதுவும் ஒன்றுமே தெரியாத ஒருவனை பற்றி எதற்காக இவ்வளவு யோசிக்கிறோம் என்று நந்தினிக்கே புரியவில்லை...

  

ஆனால்... அவள் எத்தனை தடவை மனதை திசை திருப்ப முயன்றாலும் எஸ்.கே’வும், அவனின் முகமும்... நேர்த்தியான உடற்கட்டும் அவளின் கண் முன்னே வந்து நின்று, அவளின் கருத்தை ஆக்ரமித்துக் கொண்டே இருந்தது...

  

அவளுக்கும் அருணுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்த நாட்களில் கூட அவளின் மனம் இப்படி சலனப் பட்டது இல்லை... அருணுடன் பேசுவது, மெசேஜ் அனுப்புவது, அவனுடன் வெளி இடங்களுக்கு செல்வது, நேரம் செலவிடுவது... என அவ்வளவு செய்திருந்தாலும் இன்று அவளுள் ஏற்பட்டிருப்பது போன்ற உணர்வலைகள் ஏற்பட்டது இல்லை...

  

ஒரு வேளை விஜயா சொல்வது போல இது எல்லாம் வயசுக் கோளாறோ??

  

அவள் மட்டும் தனியாக இருப்பதால் பார்க்க ஸ்மார்ட் அண்ட் ஹான்ட்சம் ஆக இருக்கும் ஒரு இளைஞனை சந்தித்ததும் அவளின் மனம் தடுமாறுகிறதோ???

  

இத்தனை எண்ணங்கள் சைட் ட்ராக்கில் ஓடினாலும், மீண்டும் மீண்டும் எஸ்.கே மட்டுமே நந்தினியின் நினைவில் வந்து நின்றான்...

  

அவனின் காயத்தை பார்த்து அவள் கையை எடுத்தப் போது அவன் பார்த்த அந்தப் பார்வை...

  

அதன் நினைவில் இப்போதும் அவளின் வயிற்றினுள் பட்டாம்பூசிகள் பறந்தன...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 10 - பிந்து வினோத்Saratha 2022-01-08 07:03
Nice update bind
Immam sothi iruku sk ku
Neenga palaya chapathi podreenga paati😁😁😁
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 10 - பிந்து வினோத்Thenmozhi 2021-12-01 06:17
Poor Nands ;-) ;-) SK-oda charm apadi madam, enna seirathu :P :P :P
SK Nands epadi kandupidicharnu inum sollalaiye Binds?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 10 - பிந்து வினோத்AdharvJo 2021-11-30 15:32
Cute update bindu ma'am 👏👏👏👏👏👏 Nand's inime ippadi ellam harsh ah singular la no talking steam :P rendu peroda expressions and Nanthini oda feelings azhaga portray seithu irukinga 👌 btw indha SK kku inga yarai theriyum, enna theriyum nu vandi eduthutu poi yara kupittu vara poraru :Q: look forward to see what happens next.apro andha PA ti kku solli vainga adutha time la irundhu suda suda chappathi kuduka solli andha paati solluradhu ketala SK mele paridhabam pada than thonudhu 😔 😂
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 10 - பிந்து வினோத்Srivi 2021-11-30 15:09
very nice :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 10 - பிந்து வினோத்அன்பு நிலா 2021-11-30 13:04
nice epi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 10 - பிந்து வினோத்madhumathi9 2021-11-30 07:15
:clap: nice & cute epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top