(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 19 - பிந்து வினோத்

தேங்க்ஸ் ஃபார் ஜாய்னிங் தி கால் எவ்ரி ஒன். பை.”

  

தொடர்ந்த ‘பை, பை’களுக்கு நடுவே, போன் ரீசிவரை கீழே வைத்த மஞ்சுவிற்கு அலுப்பாக இருந்தது. செல்போனை கையில் எடுத்துப் பார்த்தாள். அவள் அனுப்பிய மெசேஜுகள் எதற்குமே மனோஜ் இன்னும் பதில் அனுப்பவில்லை.

  

அவளின் டெஸ்க்கின் ஓரமாக இருந்த சின்ன போட்டோ ஃப்ரேமின் பின்னே சிரித்துக் கொண்டிருந்த மனோஜை பார்த்து முறைத்தாள்.

  

“மை முசுட்டு மேனேஜர், இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் ஆயிடுச்சு. என் மெசேஜுக்கு பதில் அனுப்பாம இருக்கீங்க??? ஹ்ம்ம்...???” ரகசியக் குரலில் போட்டோவில் இருந்த கணவனுடன் சண்டைப் போட்டாள் மஞ்சு...

  

அவள் அட்லான்டாவிலும், மனோஜ் சிகாகோவிலும் என வாழத் தொடங்கி இரண்டு வருடங்கள் ஓடிப் போயிருந்தது...

  

அவர்களின் மூன்றாவது திருமண நாளும் கூட அதன் பாட்டில் வந்துப் போய் விட்டிருந்தது...

  

இருவரும் வசிக்கும் மாநகரங்களின் நடுவே தொலைவு அதிகம் என்பது மட்டுமல்லாமல்... இருவரின் நகரங்களில் இருக்கும் நேரமும் கூட வித்தியாசப்பட்டது... மஞ்சு இருக்கும் அட்லாண்டாவின் நேரம் மனோஜ் இருக்கும் சிகாகோவை விட ஒரு மணி நேரம் முன்னே இருந்தது...

  

முதலில் ஒன்றும் இல்லாததாக தோன்றிய இந்த விஷயங்கள் இப்போது அவர்கள் இடையே பெரும் சுவரை உருவாக்கி வைத்திருந்தது...

  

அவள் இந்தியாவிலும், மனோஜ் அமெரிக்காவிலும் இருந்த நாட்களுக்கும் இதற்கும் பெரிய அளவில் வேறுப்பாடு இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை...

  

அவள் முதல் முறை அட்லான்டா வந்த போது மனோஜ் அவளுடனே வந்து ஒரு வாரம் தங்கி

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.