(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

யோசிக்க வேண்டிய அவசியம் கூட மஞ்சுவிற்கு இருந்ததில்லை...

  

ஆனால் கௌரவ் விஷயம் அப்படி இல்லை...

  

“மஞ்சு, இன்னைக்கு டிஸ்கஷன்ல உன் ப்ராஜக்ட் பத்தி ஒரு கேள்வி வந்தது... இங்கே நோட் செய்திருக்கேன் பாரு... இவ்வளவு அவுட்ஸ்டான்டிங் ப்ராப்ளம்ஸ் இருக்குன்னு சொல்லி இருக்காங்க???”

  

அவள் ப்ராஜக்ட்டில் பிரச்சனையா??? மஞ்சு கேள்வியுடன் கௌரவ் காட்டிய மொபைலை காண அமர்ந்த படியே அவன் இருந்த பக்கமாக சாய்ந்து எட்டிப் பார்த்தாள்.

  

கௌரவின் கண்கள் போகும் திசையை கவனித்தவள்... பற்களைக் கடித்துக் கொண்டு ஆதரவுக்கு வைப்பதாக பாவ்லா செய்து தன் கையை கழுத்துக்கு கீழே வைத்துக் கொண்டாள்.

  

அப்படியே கௌரவ் காட்டிய விபரங்களை பார்த்தவள்,

  

“இது எல்லாம் பழைய டேட்டா கௌரவ். ஆல்ரெடி ஃபிக்ஸ் செய்தாச்சு...” என்று சொல்லி உடனே நிமிர்ந்து அமர்ந்தாள்.

  

அவளின் மனதுள் ஓடிய இயலாமை கலந்த கோபத்தை விளக்குவது கடினம். பற்களைக் கடித்துக் கொண்டு எதுவும் இல்லை என்பதாக முகத்தை வைத்துக் கொண்டாள்...

  

இதுவரை வேலை சேர்ந்த நாளில் இருந்து இதுப் போன்ற பிரச்சனையை மஞ்சு சந்திக்க நேர்ந்ததில்லை... நிர்மல் போல கலகலக்கும் நபர்களையும் சந்தித்திருக்கிறாள், அவளைப் போல தேவைக்கு பேசுபவர்களையும் பார்த்திருக்கிறாள்...

  

ஆனால் கௌரவ் போல கேவலமான ஒருவனை அவள் வேலை இடத்தில் அதுவரை சந்தித்ததில்லை... இவன் எப்படி இவ்வளவு பெரிய, புகழ் பெற்ற கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறான் என்றுக் கூட அவளுக்குப் புரியவில்லை...

  

இத்தனைக்கும் கௌரவ் திருமணமாவன்... மஞ்சு அவனின் மனைவி புனிதாவை

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.