நந்தினி வீட்டிற்கு திரும்பியப் போது எஸ்.கே மாடி அறையின் கூரை மீது நின்று வேலை செய்துக் கொண்டிருந்தான்.
சரித்திர கதைகளில் வரும் இளவரசர்கள், அரசர்கள், மாவீரர்கள் என அனைவரையும் விவரிக்கும் வரிகள் நந்தினிக்கு நினைவில் வந்தது.
புஜ, பல, பராக்கிரமம் பொருந்தியவன்...
எஸ்.கே’விற்கும் அது சரியாக தான் இருந்க்கும்...
சினிமா கதாநாயகர்களைப் போல எஸ்.கே’வின் கைகள், கால்கள் ஏன் மொத்த உடலுமே சிறப்பாக செதுக்கப்பட்டது போல கச்சிதமாக இருந்தது...
நந்தினிக்கே அவள் இப்படி ஒவ்வொரு தடவையும் எஸ்.கே’வை இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பது எப்படியோ தான் இருந்தது...!!! ஆனாலும் அவன் அவளின் முன் இருக்கும் நேரங்களில், அவளின் கண்கள் அவன் பக்கமே தான் சென்றன...
முடிந்த அளவில் எஸ்.கேவின் முன்னிலையில் வராமல் இருப்பதே நல்லது...
மீண்டும் அதே முடிவை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்...
அன்று வேலையை முடித்து எஸ்.கே வரும் போது கொடுக்க வேண்டிய பணத்தை அப்போதே சீதாவிடம் கொடுத்து வைத்தாள். வேலை நிமித்தம் எஸ்.கே ஏதாவது கேள்விகள், சந்தேகங்கள் கேட்டாலும் சீதாவையே கையாள சொன்னாள்.
அதன் பிறகு, நந்தினி ஐபேடில் ஜர்னல்களை திறந்துக் கொண்டு படிக்கத் தொடங்கினாள்... முதலில் அவளின் கவனம் சிதறத் தான் செய்தது... ஆனாலும் முயற்சி செய்து மனதை அடக்கி ஜர்னல்களில் கவனத்தை செலுத்தினாள்...!
இரவு உணவு நேரம் வரும் வரைக்கும் சீதா அவளை தொந்தரவு செய்யவே இல்லை... நந்தினி
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Thank you and keep rocking.