“பூஜா நீ சாப்பிடவே இல்லையாமே? இப்படி இருந்தா எப்படிடா? வா கொஞ்சமா ஏதாவது சாப்பிடு,” என்றான் ரோஹித் அக்கறையுடன்.
பூஜா மறுப்பாக தலை அசைத்ததை சட்டை செய்யாமல் அவளின் கையை பிடித்து, அமர்ந்திருந்தவளை வலுக்கட்டாயமாக எழுப்பினான் ரோஹித்.
“வா, நானே உனக்கு எடுத்து தரேன்.”
ரோஹித் பூஜாவை குழந்தையை அழைத்து வருவதுப் போல மென்மையாக கைப் பிடித்து அழைத்து வந்தான்.
உணவறையின் அருகே வேறு எதோ யோசனையில் ஆழ்ந்திருந்த ராதா இவர்கள் இருவரும் வரும் சத்தம் கேட்டு அவர்கள் திசையில் பார்த்தாள்.
பூஜா கண்ணீர் படிந்த முகத்துடன் இப்போதும் சோகமாக இருப்பதை பார்த்தவளுக்கு அலுப்பாக வந்தது.
ரோஹித் வேறு அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்து, அவள் உட்கார உதவி வேறு செய்யவும், ராதாவின் ஓட்டு மொத்த பொறுமையும் காணாமல் போனது.
“பூஜா, நீ செய்றது சரியாவே இல்லை. உன் அண்ணன் சதீஷுக்கு இப்படி ஆகும்னு யாருமே நினைக்கலை. அதுக்காக நாலு அஞ்சு மாசம் ஆனப்புறமும் நீ இப்படியே இருந்தா எப்படி? உனக்குன்னு ரோஹித் இருக்கான். அந்த கம்பெனி இருக்கு. அதை எல்லாம் பார்க்க வேண்டாமா??? போனவனையே நினைச்சுட்டு அழுதுட்டு இருந்தா எப்படி? முதல்ல அழுகையை நிறுத்து. நாளைல இருந்து ஆபீசுக்கு போ. அங்கே எல்லா பார்மாலிட்டீஸும் முடிச்சு கம்பெனியை உன் பேருக்கு மாத்தி உன் கண்ட்ரோல்ல கொண்டு வா. உன் அண்ணனும் இல்லாம, நீயும் கவனிக்காம, அங்கே யாரு என்ன செய்றாங்கன்னே தெரியலை. இதை எல்லாம் யோசிக்காம நீ இப்படியே அழுதுட்டு இருந்தா சதீஷ் திரும்ப வந்திருவானா? எனக்கும் கூட வருத்தமா தான் இருக்கு. திரும்பி வந்ததும் கல்யாணம்னு சொல்லிட்டு போனான். ரோஹினி வாழ்க்கை இப்போ கேள்வி குறியாயிடுச்சு. அதுக்காக நான் உட்கார்ந்து
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Cute update ma'am😍😍 👏👏👏👏👏👏 So Pooja and rohith r coming in search SK 👌look forward to see what happens next.
Thank you