Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 13 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un Idhayam Pesugiren
Pin It

தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 18 - ஸ்ரீலேகா D

ங்களை தொந்தரவு செய்ய எனக்கு விருப்பம் கிடையாது. இந்த மீட்டிங் ரொம்ப முக்கியம். நான் வர ரொம்ப லேட் ஆயிடும். இப்போ உடனே உதவி செய்ற மாதிரி வேற யாரும் பக்கத்துல இல்லை.” பூர்வி ரொம்பவும் தயக்கத்துடன் அனிலிடம் அந்த உதவியைக் கேட்டாள்.

  

சின்னக் குழந்தைகளை எப்படி தனியாக விடுவது என்று அவளுக்கு கலக்கமாக இருந்தது. அதிக பரிச்சயம் இல்லாத மூன்றாவது மனிதன் ஒருவனிடம் இதற்கு உதவி கேட்க வேண்டி இருக்கிறதே என்று அவளுக்கு வருத்தமாகவும் இருந்தது.

  

எனினும் அவளுக்கு அடுத்ததாக பிள்ளைகள் இருவரும் நன்றாக பழகியது அனிலிடம் தான். மற்றபடியும் அவள் வேறு யாரிடம் இந்த உதவியை கேட்க முடியும்?

  

இரவு பத்து மணி வரை டே கேரில் பிள்ளைகளை பார்த்துக் கொள் என்று கேட்பது அவளுக்கே அபத்தமாக தான் தெரிந்தது.

  

பூர்வியே மனம் நிறைய குழப்பங்களுடன், தயக்கத்துடன் தான் அனிலிடம் உதவி கேட்டாள். அனில் வேறு அவளை நேராக பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்ற விதம் பூர்வியின் மனதை குத்த தான் செய்தது. அவன் என்ன பதில் சொல்கிறான் என்று தெரிந்துக் கொள்ளும் எண்ணத்துடன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றாள்.

  

“ஒருத்தருக்கு ஒருத்தர் உதவாம பக்கத்துல இருந்து என்ன செய்ய போறோம். நீங்க ஈஷான், நிரவி பத்தி கவலைப் பட வேண்டாம். நான் அரேஞ்ச்மென்ட்ஸ் செய்றேன்,” என்றான் அனில் இலகுவாக.

  

“அரேஞ்ச்மென்ட்டா, என்ன அரேன்ஜ்மென்ட்?”

  

“பத்து மணிங்குறது ரொம்ப லேட். நான் மாதவி கிட்ட மேக்ஸிமம் ஒன்பது மணி வரைக்கும்னு தான் சொல்லி இருக்கேன். நான் வேணா ஒரு மணி நேரம் பார்த்துக்கலாம்,”

  

பூர்விக்கு திக்கென்றது!

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sreelekha D

Sreelekha D

Latest Books in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

  

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 18 - ஸ்ரீலேகா DSubiksha 2022-01-06 18:54
Mathavi nalavala nu terilaiye. Anilum mystery?
Enna nadakka poguthu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 18 - ஸ்ரீலேகா Dmadhumathi9 2022-01-06 12:13
Nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

OONV

EUUTT

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

VV

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top