(Reading time: 5 - 9 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 24 - பிந்து வினோத்

னோஜ் அழைப்பு மணியை ஒலிக்க செய்தான்.

  

அவன் அருகே இருந்த மஞ்சு கதவை பார்க்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்... அதை மனோஜும் கவனித்தான்...

  

“என்ன pbs லுக் எல்லாம் பயங்கரமா இருக்கு???

  

“திடீர்னு வந்திருக்கோமே வரவேற்பு எப்படி இருக்கும்னு யோசிக்கிறேன்...”

  

“ஸ்வீட் சர்ப்ரைஸா இருக்கும்...” என மனோஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசல் கதவு கொஞ்சம் திறந்தது...

  

“மனோஜ் நீயே தானா??? உன்னை மாதிரி தான் இருந்தது... நீ எங்கே வந்திருக்க போறேன்னு நினைச்சேன்... என்ன இப்படி திடீர்னு வந்திருக்கீங்க???” என்று ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் சரி விகிதத்தில் கலந்து பேசினாள் நிர்மலா. அபப்டியே அவர்களுக்காக கதவையும் திறந்து விட்டாள்.

  

“எனக்கு இங்கே சென்னை ஆபீஸ்ல ஒரு வேலை இருக்கும்மா. இரண்டு வாரத்துல கல்யாணத்துக்கு வரனும், முன்னாடியே கிளம்பி வந்துடலாம்னு முடிவு செய்தோம்... உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லலை...

  

மனோஜ் விளக்கம் கொடுத்து கொண்டிருக்கும் போதே, ஜோதி மாடியில் இருந்து வேக வேகமாக இறங்கி ஓடி வந்தாள்.

  

“அண்ணா!! இப்படி சொல்லாம கொள்ளாம வரதே உனக்கு வேலையா போச்சு... நீங்களாவது சொல்லி இருக்கலாம் அண்ணி...” என்று அவளும் அவர்களை ஆச்சர்யமும், மகிழ்ச்சியுமாக வரவேற்றாள்...

  

“கல்யாணப் பொண்ணு இவங்க தானாம்மா? அது தானா முகம் எல்லாம் இப்படி ஷைன் அடிச்சுட்டே இருக்கு...” என்று மனோஜ் தங்கையை கேலி செய்யவும்,

5 comments

  • Nice update with a lovely message Bindu ma'am 👏👏👏👏👏👏👏 Nirmala aunt's pov is understandable parkalam how Manju will off set it.... Jyothi oda transition is :cool: <br />Thank you!!
  • unmai. oruvaruku oruvar matri matri vitu koduthal family family aga irukum. Jothi manjuvugaga amma kitta pesi irukkurathu highlight. good epi.<br />Happy pongal to you.
  • இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழி. மிகவும் அருமை.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.