Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un Idhayam Pesugiren
Pin It

தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 20 - ஸ்ரீலேகா D

முதல் முறையாக பூர்விக்கு அனிலை பார்த்தது நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்கு அவன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை, அவனை பிடிக்காது என்பது எல்லாம் இப்போது முக்கியமாக படவில்லை. ஆறுமுகத்தை அனில் பார்த்துக் கொள்வான் என்று தோன்றியது.

  

காரில் இருந்து இறங்காமல், ஒரு வார்த்தை சொல்லி கிளம்பி விட அவள் முடிவு செய்த போது அவளின் பின்னே இன்னுமொரு கார் வேகமாக வந்து நின்றது.

  

அதில் இருந்து ராகுல் இறங்கி வந்து பூர்வியின் கார் அருகே வந்தான்.

  

“பூர்வி, யூ ஓகே?

  

பூர்விக்கு ராஹுலை அங்கே பார்த்ததே திகைப்பைக் கொடுத்தது. அதனால் உடனே பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

  

ராகுல் அங்கே இருந்த மற்றவர்கள் இரண்டுப் பேரையும் சந்தேகத்துடன் பார்த்தான்.

  

“ஏன் காரை இங்கே நிறுத்திட்டீங்க பூர்வி?

  

“அவர் திடீர்னு நடுல க்ராஸ் செய்தார் அதனால சடன் ப்ரேக் போட வேண்டியதா போச்சு ராகுல்.”

  

பூர்விக்கு காரில் இருந்து இறங்க மனம் இல்லை. ராகுல் சாலையில் நிற்கும் போது அவள் காரின் உள்ளே அமர்ந்திருப்பது மரியாதை குறைச்சலாகவும் தோன்றியது.

  

பூர்வி அவசரமாக யோசித்த வேளையில், ராகுலையும் பூர்வியையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அனில் ஆறுமுகத்தை கிளப்பும் வேலையில் இறங்கினான்.

  

“ஆறுமுகம், இந்த மாதிரி நேரம் கெட்ட நேரத்துல வெளியே அலையுறதை நிறுத்து. ஏற்கனவே உன் கிட்ட பேசி இருக்கேன். அது தான் உனக்கு நல்லது. இப்போ கிளம்பு, போ.”

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Sreelekha D

Sreelekha D

Latest Books in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

  

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 20 - ஸ்ரீலேகா Dmadhumathi9 2022-01-25 12:48
:clap: nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 20 - ஸ்ரீலேகா DAK 2022-01-20 17:32
Next episode sikiram podunga.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 20 - ஸ்ரீலேகா DRenu Al 2022-01-20 17:26
romba interestinga poguthu Leka
Reply | Reply with quote | Quote

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
UNEY

EEKEE

EESM

UNV

KiMo

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

AAaEEe

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top