(Reading time: 6 - 11 minutes)
Inspector Then
Inspector Then

இன்னும் கேள்விகளை கொடுக்குது! இந்த ஃபார்முலாவை நீங்க லாக்கரில் இல்லாமல் சாதாரணமான இடத்தில், ஒரு டேபிள்ல இல்லை ஷெல்ஃபில எல்லாம் வைக்க வாய்ப்பு இருக்கா?"

  

"நோ வே சார்! அது டைமன்ட் போல விலை மதிப்பில்லாத பொருள். அதை அப்படி எல்லாம் கேர்லஸா வைக்க முடியாது. ஆஃபீஸ்க்கு அவ்வளவு சேப்ட்டி கொடுத்திருக்க நான், ஃபார்முலாவை குப்பை போல வைப்பேனா என்ன? வாய்ப்பே கிடையாது."

  

"இல்லை, யாரும் எதிர்பார்க்காத இடத்துல வைக்குறதுக்காக அப்படி ஏதாவது செய்தீங்களான்னு கேட்கிறேன்."

  

"நோ இன்ஸ்பெக்டர்! சினிமால வேணா யாராவது அப்படி வைக்கலாம். ரியல் லைஃபில் பிஸ்னஸ் சம்மந்தமான விலை உயர்ந்த பொருளை அப்படி யாருமே வைக்க மாட்டாங்க!"

  

"நீங்க சொல்றது கரக்ட் தான்!” என்றான் தேன் யோசனையுடன்!

  

“வீடு இருந்த நிலைமைன்னு சொல்றீங்களே, அப்படி எதை சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

  

"ஷுயர்! க்ரைம் நடந்த அன்னைக்கு, நீங்க சொன்னது போல உங்க வீட்டில் பொருட்கள் எல்லாம் கன்னாபின்னான்னு கலைஞ்சு கிடந்தது. ஆனால் அதில க்யுரியஸா டேபிள் மேல இருந்த பேப்பர், ஃபிளவர் வேஸ் இதெல்லாம் கூட கீழே விழுந்திருந்தது..." என்றான் தேன் தன் முன்னே இருந்தவர்களை கூர்மையாக பார்த்துக் கொண்டே!

  

அப்போது தென்றல்வாணன் அருகே இருந்த டெலிபோன் ஓசை எழுப்பியது,

  

அதை எடுத்துப் பேசிய தென்றல்வாணனின் கண்கள் ரமணி மீது பதிந்தது.

 

இறுதியாக, “ஓகே, தேங்க்ஸ்!” என்று மட்டும் சொல்லி ரிசீவரை மீண்டும் வைத்தான்.

    

தொடரும்...

Go to Inspector Then story main page

5 comments

  • Interesting update Then ma'am 👏👏👏👏👏👏 Ramani rombha over than react aguraru...magan mele.irukura akarai thuliyum dil mele illaiye :Q: sandhega pada kudiyavara illai culprit Ivar thano :Q: mandaiya kai vidamal suspense break panunga madam ji... :yes: <br />Thank you and keep rocking!!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.