(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 30 - பிந்து வினோத்

ஞ்சுவால் மனோஜின் கோபத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் மனோஜ் எடுத்திருக்கும் முடிவை சரி என்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  

கோபத்தில் இருக்கும் போது எடுக்கும் முடிவு சரியானதாக இருக்காது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

  

ஆனால் மனோஜ் இதை கௌரவ பிரச்சனையாக பார்ப்பதால் உணர்ச்சிவசப் படுவதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

  

அதைப் பற்றி தொடர்ந்துப் பேசி விவாதித்துக் கொண்டிருக்காமல், அப்போதைக்கு அமைதியாக மனோஜை தேற்ற முயன்றாள்! கொஞ்சம் நேரம் சென்றால் மனோஜே தெளிவாக யோசிப்பான் என்று அவளுக்கு தோன்றியது!

  

ஆனால் மனோஜ் தன் முடிவில் பிடிவாதத்துடன் நின்றான்.

  

அடுத்து வந்த நாட்களில் மும்முரமாக வேலைத் தேட ஆயத்தம் செய்ய தொடங்கினான். அதற்காக தன்னுடைய ரெஸ்யூமே (resume) தயார் செய்யும் வேலையை தொடங்கினான்.

  

மஞ்சுவிற்கு அவனின் பிடிவாதம் புதிதாக இருந்தது.

  

அவனிடம் இதெல்லாம் இப்போது வேண்டாம் என்று தடுப்பதா, வேண்டாமா என்று அவளுக்கு தயக்கமாக இருந்தது.

  

பிசியாக டைப் செய்துக் கொண்டிருந்தவனின் அருகே சென்றாள்.

  

நிமிர்ந்துப் பார்க்காமலே, “PBS!” என்ற மனோஜ், டைப் செய்வதை நிறுத்தவில்லை.

  

அவன் பக்கத்தில் அமர்ந்தாள் மஞ்சு. அவன் என்ன டைப் அடிக்கிறான் என்பதை கவனித்தாள்.

  

மனோஜ் தன் வேலை அனுபவங்களை சுருக்கமாக எழுதிக் கொண்டிருந்தான்.

5 comments

  • Complex, insecurity ellam kuttani sernthudichi pole facepalm 24/7 employee yagave irundha ippadi than steam too much Mr M inoru vaati Mrs M mele erinji vilundhinga 3:) 3:) sad of her!! Semma realistic flow ma'am 👏👏👏👏👏👏all of us do this wen we r frustrated, disappointed...hope Manju stays calm and support him...entha hasty decision edukamal.irukatum. good going ma'am .<br />Thank you.
  • Idhai nan expect seiyalai. why? why why? oru idathula problem irukunu innoru idathula adicha epadi sariya pogum. ,anoj ippadi seirathu parka pidikave illai.
  • Aw..... Poor manju ... Manoj um paavam than... These are the tough situations that cum in every marg life .. hopefully intha sandai la oru thelivu kedachirum for both
  • :sad: manjukku aaruthal solla kooda pakkaththil aal illai. :Q: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.