Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nenchil Payuthe minalaa
Pin It

தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 02 - Sweet Princess

  

ஹேமா சொன்ன தகவலின் அதிர்ச்சியில் சில வினாடிகள் இருந்த வைஷ்ணவி பின் சிரித்தாள்.

  

“கமான் மம்மி! ஜோக் அடிக்காதீங்க!”

  

“வைஷ், நான் ஜோக் அடிக்கலை சீரியஸா சொல்றேன். நானும் அர்ஜுன் அம்மா ராகவியும் ரொம்ப வருஷமாகவே பிரென்ட்ஸ்.”

  

வைஷ்ணவி இது என்ன புது கதை என்பதாக அம்மாவை பார்த்தாள்.

  

“இப்போ நாங்க அவ்வளவா பேசிக்குறது கிடையாது, சந்திக்குறதும் கிடையாது. எதுக்குன்னா உன் அப்பாக்கும் அர்ஜுன் அப்பாக்கும் சுத்தமா ஒத்து வராது.”

  

ரமேஷ் இந்த இடத்தில் குறுக்கிட்டு பேசினார்.

  

“எனக்கு ஒத்து வராதுன்னு சொல்றது சரி கிடையாது. பிரசாத் பொறுத்த வரைக்கும் நான் எப்போவும் குப்பையை கிளருறவன், அவன் பெரிய அரசியல்வாதி. அதனால என்னை அவன் மதிச்சது கிடையாது. நானும் அவனை பொருட் படுத்துனது இல்லை.”

  

வைஷ்ணவியோ இது எனக்கு இப்போது ரொம்ப தேவையான தகவல் என்பதாக பார்த்து விட்டு மீண்டும் ஹேமாவை பார்த்தாள். ஹேமா தொடர்ந்தாள்.

  

“கல்யாணத்துக்கு முன்னாடி நானும் ராகவியும் நல்ல சிநேகிதிகளா இருந்தோம். அவளுக்கும் பிரசாத்க்கும் கல்யாணம் நடந்தது. அந்த கல்யாணத்துல ராகவிக்கு சந்தோஷம் இல்லை. என் கிட்ட மட்டும் மனசு விட்டு பேசுவா. அவளுக்காகவே நான் நிறைய தடவை அவ வீட்டுக்கு போவேன். அப்போ அவங்க வீடு பக்கத்துல இருந்த வீட்டுல வேலை நடந்துட்டு இருந்தது. அங்கே வேலை செய்த உன் அப்பாவை நான் சந்திச்சேன். எங்களுக்குள்ளே காதல் வந்தது. என் குடும்பம் நல்ல நிலமையில இருந்த குடும்பம். உன் அப்பாவை மருமகனா ஏத்துக்க அவங்க சம்மதிக்கலை. அப்போ ராகவி தான் எங்களுக்கு உதவினா, கல்யாணம் செய்து வச்சா. நாங்க வாழ்க்கையை தொடங்க பணம் கொடுத்தும் உதவினா. நீ பிறந்தப்போ ரொம்ப கஷ்டத்துல

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Sweet Princess

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 02 - Sweet Princessmadhumathi9 2022-05-01 07:05
:D saryaana comedy kathai pogumo :Q: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

OONV

EUUTT

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

VV

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top