(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 36 - பிந்து வினோத்

சேஷாத்ரிக்கு ஒரு போன் அழைப்பு வரவும் சரவணன் மற்றும் அமுதாவிடம் முக்கியமான அழைப்பு என்று பணிவுடன் சொல்லி, அறையை விட்டு வெளியே சென்றார்.

அவர் சென்றதும் மனோஜுக்கு பதில் சொல்லும் விதமாக,

“உண்மையாகவே சர்ப்ரைஸ் தான் மனோஜ்!” என்ற அமுதா, குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சரவணனிடம்,

“சரா, இவர் தான் மனோஜ்! நான் சொன்னேனே அதே மனோஜ்!” என்றாள் சிரிப்புடன்.

“ஒ, அப்போ இவர் தான் மஞ்சுவோட ஹஸ்பன்டா?” என்று சரவணன் கேட்டதற்கு அமுதா பதில் சொல்லவில்லை. மனோஜ்,

“ஆமாம் நான் தான் மஞ்சுவோட ஹஸ்பன்ட் மனோஜும்...” என்றான். அமுதாவின் அமைதியையும் அவன் கவனிக்க தவறவில்லை.

மஞ்சு பற்றி சரவணன் கேட்டதற்கு அமுதா முகத்தில் பெரியதாக எந்த ரியாக்ஷனை காட்டிக் கொள்ளவில்லை. ஒன்றும் சொல்லாமல் அமைதியாக தான் இருந்தாள். ஆனால் அமுதாவும் மஞ்சுவும் எந்த அளவிற்கு நெருங்கிய தோழிகள் என்பது மனோஜிற்கு திருமணத்திற்கு முன்பே தெரியும். இப்போது அமுதா தோழியை பற்றிய குறிப்பிட்டை பொருட்படுத்தாமல் இருப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

அதற்குள் சரவணன் பேசத் தொடங்கவும் தன் சொந்த ஆராய்ச்சியை நிறுத்தி, சரவணன் பேச்சை கவனித்தான் மனோஜ்.

“அமுதா இந்த ஜாப்க்கு நீங்க தான் பர்ஃபெக்ட்டா இருப்பீங்கன்னு சொல்லிட்டு இருந்தா. சேஷாத்ரி ஃபீட்பேக் படி அவரும் அதே ஒபினியன் தான் வச்சிருந்தார். இரண்டு பேரும் ஒரே ஒருத்தருன்னு தெரியாம நான் தான் குழம்பி போயிருந்தேன். நவ் ஐ ஆம் ஹாப்பி. உங்களை பத்தி அமுதா வழியா நிறைய கேள்வி பட்டிருக்கேன் மனோஜ். எங்க கம்பெனி உங்க பழைய எம்ப்ளாயர் பக்கத்துல சின்ன கம்பெனி. ஸ்டில் இங்கே நிறைய க்ரோத் ஆஸ்பெக்ட்ஸ் இருக்கு.

4 comments

• superb ud bindu. Manoj selfish nu solla mudiyathu. He did what was right at that particular junction.
• hi sis
manoja pakkum pothu katuppa iruku
ellarum epti than suyanalama yosikuraga
story move super
but miss manju & manoj romance
epa pa evvaka santaiku murru pulli vakka porika
sikkaram ammu & munju seranum dug frnds

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.