“எதுக்கு அர்ஜுன், வைஷ்ணவி கிட்ட அப்படி பேசின? நீ இப்படி நடந்துக்கிட்டா உங்க கல்யாணம் எப்படி சரியா இருக்கும்?”
ராகவிக்கு பதில் சொல்லாமல் அலுப்புடன் அமர்ந்து இருந்தான் அர்ஜுன். அரை மணி நேரமாக இதே அர்த்தத்தில் வேறு வேறு வார்த்தைகளை வைத்து மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கிறாள் ராகவி. அவனுக்கு அலுப்பாக இருந்தது.
எப்படியாவது இந்த பிக்கல் பிடுங்கலில் இருந்து எஸ்கேப் ஆனால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான்.
“அம்மா, இந்த கல்யாணம் நடந்தா அதை விட பொருத்தமில்லாத கல்யாணம் நடக்கவே முடியாது. வைஷ்ணவிக்கு என்னை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது.” அர்ஜுன் வெறுப்புடன் பேசினான்.
ராகவி கோபம் கொள்ளாமல் மகனின் தலை முடியை அன்புடன் கோதினாள்.
“உன்னை வைஷ்ணவிக்கு பிடிக்காம இருக்குறதுல ஆச்ராயம் என்ன இருக்கு அர்ஜுன்? நீ அவக் கிட்ட நடந்துக் கிட்ட விதம் அப்படி. நீ இப்போ அப்படி இல்லைன்னு எனக்கு தெரியும். நீ பழைய மாதிரி பொறுப்பு இல்லாத, எல்லோரையும் நோகடிக்குற அர்ஜுன் கிடையாது. வைஷ்ணவி கிட்ட அன்பா பேசு. அவளை வெளியே அழைச்சுட்டு போ. பேசி பழகினா உங்க இரண்டுப் பேருக்கும் பிடிக்கும். உன் நல்லதுக்கு தான் சொல்றேன் அர்ஜுன்.”
உன் நல்லதுக்கு தான் எனும் சொற்றொடர் கேட்டதும் அர்ஜுனுக்கு கோபம் அதிகமானது. அதென்ன அது எப்போதும் அவனுக்கு எது நல்லது என மற்றவர் முடிவு செய்வது?
ராகவியின் உடல் நலத்தை மனதில் வைத்து கோபத்தை வெளிபடாமல் அடக்கினான் அர்ஜுன். எனினும் விருட்டென்று எழுந்துக் கொண்டான்.
“எனக்கு நல்லது நடக்க போறது கிடையாது ம்மா. வைஷ்ணவி மூஞ்சியை பார்க்க கூட எனக்குப் பிடிக்கலை. இந்த கல்யாணம் முழுக்க முழுக்க உங்க திட்டம். ஏமாற்றம் வரப்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.